முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு-காஷ்மீரில் செல்போன் சேவை தற்காலிக நிறுத்தம்

வியாழக்கிழமை, 15 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர், ஆக. 16 - சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு காஷ்மீரில் செல்போன் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் செல்போன் சேவை நேற்று தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் நேற்று அதிகாலையிலேயே செல்போன் சிக்னல்களை ஆப் செய்து விட்டனர். முன்பு ஒரு முறை சுதந்திர தினத்தன்று கொரில்லாக்கள் பாதுகாப்பு படையினர் மற்றும் வி.வி.ஐ.பி. க்களை தாக்க ரிமோட் கன்ட்ரோலில் இயங்கும் வெடிகுண்டுகளை பயன்படுத்தினர். இது போன்ற குண்டுகள் செல்போன் சிக்னல்கள் மூலம் வெடிக்கச் செய்யப்படுகிறது. அதனால் தான் நேற்று சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. மாநிலத்தில் கொடியேற்றம் மற்றும் அணிவகுப்புகள் முடிந்த பிறகு செல்போன் சேவை மீண்டும் தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் இன்டர்நெட் சேவை பிராட்பேண்டில் அதுவும் மெதுவாக வழங்கப்படுகிறது. சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் யாரும் இணையதளத்தில் படங்களை அப்லோட் செய்யாமல் இருக்கத் தான் இன்டர்நெட் சேவை மெதுவாக வழங்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்