எல்லையில் கட்டுப்பாட்டுடன் நடந்தால்தான் பேச்சுவார்த்தை

வியாழக்கிழமை, 15 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஆக. 16 - நாட்டின் எல்லையில் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று 67வது சுதந்திர தின உரையில் பிரதமர் மன்மோகன்சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி வைத்து பிரதமர் மன்மோகன்சிங் சுதந்திர தின உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, 

இந்தியா தொழில்நுட்பத்தில் வளர்ந்துள்ளது. நாடு வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேறி வருகிறது. வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும். இந்தியாவை வேலை வாய்ப்பு நிறைந்த நாடாக உருவாக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறி வருகிறது. உத்தரகாண்டில் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவு பெரும் கவலை அளிக்கிறது. உத்தரகாண்ட் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கப்படும். உத்தரகாண்டில் ராணுவ வீரர்கள் சிறப்பான மீட்புப் பணியை மேற்கொண்டனர். 

மும்பையில் சிந்துரக்சக் நீர்மூழ்கிக் கப்பல் தீப்பிடித்து எரிந்ததில் 18 வீரர்கள் பலியான சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. உணவு பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேறும். இந்த மசோதா நிறைவேறினால் 81 கோடி பேர் பயனடைவர். மத்திய அரசின் வேலைவாய்ப்பு ஊறுதி திட்டத்தால் ஏராளமானோர் பயனடைந்துள்ளனர். 

பீகார் மதிய உணவு துயரம் மீண்டும் நிகழக்கூடாது. தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை நீண்ட காலம் நீடிக்காது. எல்லையில் பாகிஸ்தான் கட்டுப்பாட்டுடன் நடந்தால்தான் பேச்சுவார்த்தை நடைபெறும். எல்லை பகுதியில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை பாகிஸ்தான் நாடு தடுக்க வேண்டும். மாவோயிஸ்டுகளின் போராட்டத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் ஜனநாயகப் பாதைக்கு திரும்ப வேண்டியது இப்போது அவசியம் என்றார் பிரதமர் மன்மோகன்சிங். இதே போல் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தான் ஆற்றிய சுதந்திர தின உரையில் எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்: