முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எகிப்தில் மோர்ஸி ஆதரவாளர்கள் 149 பேர் பலி..!

வியாழக்கிழமை, 15 ஆகஸ்ட் 2013      உலகம்
Image Unavailable

 

கெய்ரோ, ஆக. 16 - எகிப்தில் முன்னாள் அதிபர் முகமது மோர்ஸிக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் 149 பேர் உயிரிழந்தனர். 700 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் எகிப்தில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு மாதத்துக்கு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எகிப்தில் கடந்த ஜூலை மாதம் 3 ம் தேதி அதிபர் மோர்ஸி ராணுவத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மோர்ஸி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எகிப்து தலைநகர் கெய்ரோவில் பாரா அல் அத்வியா மசூதி மற்றும் நகர சதுக்கத்தில் மோர்ஸி ஆதரவாளர்கள் கடந்த 6 வாரங்களாக முகாம்கள் அமைத்து போராடி வந்தனர். 

இந்நிலையில் போராட்டக்காரர்களை அகற்ற ராணுவத்தினர் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். இந்த அதிரடி நடவடிக்கையில் 140 பேர் உயிரிழந்து விட்டதாகவும் சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மோர்ஸிக்கு ஆதரவளிக்கும் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு ராணுவத்தின் நடவடிக்கையில் 1,200 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் தெரிவித்துள்ளது. மோர்ஸி ஆதரவாளர்கள் மீது பாதுகாப்பு படைகள் நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட உயிர்ச்சேதம் காரணமாக வேதனை அடைந்த எகிப்து துணை அதிபர் முகம்மது எல்பரதே ராஜினாமா செய்து விட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago