முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறார் சட்ட வழக்கு: சுப்பிரமணிய சுவாமிக்கு கண்டிப்பு

வியாழக்கிழமை, 15 ஆகஸ்ட் 2013      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, ஆக. 16 - சிறார் சட்டம் குறித்து பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்துள்ள பொதுநல வழக்கு ஏற்புடையதுதானா என்பதை முடிவு செய்த பிறகே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியும் என்று சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தனது பொதுநல வழக்கு யாரையும் குறி வைத்து தொடரப்பட்டது இல்லை. டிசம்பர் 16 ல் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை ஒரு உதாரணமாகத்தான் காட்டப்பட்டுள்ளது என்று சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் உறுதியளித்தும் தலைமை நீதிபதி பி. சதாசிவம் வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மறுத்து விட்டார். இந்த வழக்கு ஏற்புடையது தானா என்பதை ஒரு வாரத்துக்குள் அறிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

முன்னதாக சுப்பிரமணியன் சுவாமியின் மனுவை எதிர்த்து வாதாடிய மத்திய அரசின் கூடுதல் சட்ட ஆலோசகர் சித்தார்த்த லுத்ரா, ஒரு குற்ற வழக்கில் வழக்குக்கு தொடர்பில்லாத மூன்றாம் நபர் தலையிடுவதை சட்டம் அனுமதிப்பதில்லை. எனவே தனி நபரை குறி வைத்து இந்த வழக்கு தொடரப்படவில்லை என்றாலும் இந்த வழக்கை அனுமதித்தால் அது தவறான முன்னுதாரணமாகி விடும் என்று வாதாடினார். டெல்லி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சிறுவன் சார்பாக வாதாடிய வழக்கறிஞரும், பொதுநல வழக்கு தொடர்ந்திருப்பவருக்கோ வழக்கின் சாட்சிகளுக்கோ பாதிக்கப்பட்டவர் குற்றம் சாட்டப்பட்டவர் ஆகிய இருவரில் யாருடனும் தொடர்பில்லை. எனவே இந்த பொதுநல வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்