முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகா 2 தூக்கு கைதிகளின் கருணை மனு நிராகரிப்பு

வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஆக. 17 - கர்நாடகத்தை சேர்ந்த 2 தூக்கு கைதிகளின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார். நாட்டில் பல்வேறு மாநிலங்களில் தூக்கு தண்டனை பெற்ற கைதிகள் தண்டனையில் இருந்து தப்பும் இறுதிக்கட்ட முயற்சியாக ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பும் நடைமுறை உள்ளது. குற்றத்தின் சூழ்நிலை மற்றும் குடும்ப நிலையைக் கருதி அவர்களுக்கு கருணை அளிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவி ஏற்றதும் நீண்ட காலமாக கிடப்பில் இருந்த கருணை மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார். அவரால் நிராகரிக்கப்பட்ட மும்பை தாக்குதல் தீவிரவாதி கசாப், பாராளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குரு ஆகியோருக்கு அடுத்தடுத்து தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
தற்போது கர்நாடகத்தைச் சேர்ந்த 2 தூக்கு தண்டனை கைதிகளின் கருணை மனுவை பிரணாப் முகர்ஜி நிராகரித்துள்ளார். அவர்கள் பெயர் ஷிவு மற்றும் ஜடே சுவாமி ஆகும். இருவரும் 18 வயது இளம் பெண்ணை கற்பழித்து கொன்ற குற்றத்துக்காக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள். இதன் மூலம் பிரணாப் முகர்ஜி பதவி ஏற்ற 13 மாதங்களில் மொத்தம் 11 கருணை மனுக்களை நிராகரித்துள்ளார். இதற்கு முன் சங்கர் தயாள் சர்மா ஜனாதிபதியாக இருந்த போது 5 ஆண்டுகளில் அதிகபட்சமாக 14 கருணை மனுக்களை தள்ளுபடி செய்தார். இப்போது பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக பதவி ஏற்ற 13 மாதங்களில் 11 கருணை மனுக்களை நிராகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகத்தைச் சேர்ந்த 2 தூக்கு கைதிகளின் கருணை மனுக்கள் மட்டுமே நிலுவையில் இருந்தது. இப்போது அதன் மீதும் முடிவு எடுக்கப்பட்டு விட்டதால் ஜனாதிபதியிடம் எந்த கருணை மனுவும் நிலுவையில் இல்லை. மேலும் கருணை மனு மீது தாமதமாக முடிவு எடுப்பதை காரணம் காட்டி தூக்கு கைதி புல்லர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் தூக்கு கைதிகளின் தண்டனையை நிறைவேற்ற இருந்த தடை நீங்கியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago