முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சின்சினாட்டி டென்னிஸ்: ஜோகோவிக் - நடால் முன்னேற்றம்

வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2013      விளையாட்டு
Image Unavailable

சின்சினாட்டி, ஆக.17 - சின்சினாட்டி டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜோகோ விக், ரபேல் நடால், ஆன்டி முர்ரே மற் றும் அசரென்கா ஆகியோர் வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.ஆடவருக்கான ஏ.டி.பி. மற்றும் மகளி ருக்கான டபிள்யு.டி.ஏ. ஆகிய 2 சங்க மும் இணைந்து அமெரிக்காவில் உள்ள முக்கிய நகரமான சின்சினாட்டியில் ஓபன் டென்னிஸ் போட்டியை நடத்தி வருகின்றன.
இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத் தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற் றும் வீராங்கனைகள் களத்தில் குதித்து உள்ளனர். இது தற்போது காலிறுதிக் கட்டத்தை அடைந்து உள்ளது.
முக்கிய போட்டிகளில் ஒன்றான இதில் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மகி ழ்வித்து வருகின்றனர்.
மகளிருக்கான ஒற்றையர் பிரிவு ஆட்ட ம் ஒன்று நடந்தது. இதில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென் காவும் சுலோவேக்கிய வீராங்கனையும் மோதினர்.
இதில் அனுபவம் மிக்க பெலாரஸ் வீராங்கனை அசரென்கா அபாரமாக ஆடி, 6 -3, 6 -4 என்ற செட் கணக்கில் மேக்டலினாவை தோற்கடித்து காலிறு திக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு ஆட்டம் ஒன்றில் சீனாவின் முன்னணி வீராங்கனையான நாலீ 6 -4, 6 -4 என்ற நேர் செட் கணக்கில் ஜெர்ம னி வீராங்கனை ஏஞ்சலிக் ஹெர்பரை தோற்கடித்தார்.
தவிர, போலந்து வீராங்கனை அக்னீஸ் கா 6 -0, 6 -2 என்ற செட் கணக்கில் ரஷ் ய வீராங்கனை எலீனா வெஸ்னினா வையும், டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி 3 -6, 6 -2, 6-3 என்ற செட் கணக்கில் செக். குடியரசு வீராங்கனை பெட்ராவிட்டோவாவை யும், செர்பிய வீராங்கனை ஜெலீனா ஜன்கோவிக் 3 -6,7 -5,7 -5 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீராங்கனை சோ லனியையும் வீழ்த்தி காலிறுதிச் சுற்று க்கு முன்னேறினர்.
ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் செர்பிய நட்சத்திர வீரரான ஜோகோவிக்கும், பெல்ஜியம் வீரரும் மோதினர்.
இதில் உலக நம்பர் - 1 வீரரான ஜோ கோவிக் வெகு நேர்த்தியாக ஆடி, 6 -2, 6 -0 என்ற நேர் செட் கணக்கில் பெல்ஜி யம் வீரர் கோபியை தோற்கடித்து காலி றுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டம் ஒன்றில் சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர் 1 -6,7 -5 , 6 -3 என்ற செட் கணக்கில் ஜெர்மனி வீரர் டாமி ஹாசை தோற்கடித்தார்.
ஸ்பெயின் நட்சத்திர வீரரான ரபேல் நடால் 6 -2, 5 -7,6 -3 என்ற செட் கணக் கில் பல்கேரிய வீரர் டிமிட்ரோவை வென்றார்.
இங்கிலாந்தின் முன்னணி வீரரான ஆன்டி முர்ரே 6 -2, 6 -2 என்ற செட் கண க்கில் பிரான்ஸ் வீரர் பெனிட்டூவையும் வீழ்த்தி கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்