முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தற்போது தேர்தல் நடந்தால் காங்., கூட்டணிக்கு படுதோல்வி

வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஆக.17 - லோக்சபை தேர்தல் தற்போது நடைபெற்றால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 122 இடங்களை இழக்க நேரிடும் என்றும் பாஜக அல்லாத இதர கட்சிகள் கடந்த முறையை விட கூடுதலாக 126 இடங்களை பெறக் கூடும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
தற்போதைய ஆகஸ்ட் மாதமே லோக்சபா தேர்தல் நடைபெற்றால் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக இந்தியா டுடே மற்றும் சி வோட்டர் இணைந்து கருத்துக் கணிப்பை நடத்தின. இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுகள் வருமாறு :-
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 137 தொகுதிகள், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 155 தொகுதிகள் கிடைக்குமாம். இந்த இரு கூட்டணிகள் அல்லாத இதர கட்சிகளுக்கு கிடைக்கும் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 251 ஆக இருக்குமாம்.
கடந்த 2009ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 259 தொகுதிகளைக் கைப்பற்றியது. ஆனால் தற்போது இதில் 122 தொகுதிகளை இழக்க நேரிடுமாம்.
பாஜக கூட்டணியும் 4 இடங்களை இழக்கும்: 2009ம் ஆண்டு தேர்தலை ஒப்பிடுகையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 4 தொகுதிகளைத்தான் இழக்க நேரிடுமாம்.
ஆனால் கடந்த தேர்தலில் இந்த இரு அணிகளிலும் இடம்பெறாத கட்சிகள் 125 தொகுதிகளைத்தான் பெற்றிருந்தன. இம்முறையோ கூடுதலாக 126 தொகுதிகளைப் பெற்று 251 தொகுதிகள் வரை கைப்பற்றக் கூடுமாம். இதனால் 3வது அணி அமைந்து காங்கிரஸ் அல்லது பாஜக ஆதரவுடன் ஆட்சி ஒன்றை அமைக்கவும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போதுள்ள லோக்சபையின் காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. அதற்குள் லோக்சபைக்கு புதியதாக தேர்தல் நடத்த வேண்டும். இந்தத்தடவை 3-வது அணி அமைந்தால் அது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணிக்கும் பெரும் தலைவலிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்