முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசிலாந்தில் நிலநடுக்கம்: கட்டிடங்கள் சேதம்

வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2013      உலகம்
Image Unavailable

வெல்லிங்டன், ஆக. 17 - நியூசிலாந்தில் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்து தலைநகர் வெல்லிங்டனில் நேற்று அதிகாலை 2.31 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் நாட்டின் வட பகுதியில் உள்ள ஆக்லாந்து முதல் தென் பகுதியில் உள்ள ட்யூன்டின் வரை உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின மற்றும் வீடுகள் சேதம் அடைந்தன. பல அலுவலக கட்டடிடங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலநடுக்கத்தால் சிலர் காயம் அடைந்துள்ளனர். உயிர் இழப்பு ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. நிலநடுக்கம் ஏற்பட்டபோது வெல்லிங்டனில் உள்ள பல லிப்டுகள் திடீர் என்று நின்றுவிட்டன. பின்னர் அதில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்