முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியன் பேட்மிண்டன்: ஐதராபாத் - மும்பை முன்னேற்றம்

வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2013      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி, ஆக. 17 - இந்தியன் பேட்மிண்டன் ஓபன் போட்டியில் ஐதராபாத் மற்றும் மும்பை அணிகள் வெற்றி பெற்று முன்னிலை பெற்று உள்ளன. இந்தியன் பேட்மிண்டன் லீக் போட்டி தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக வெகு விமர்சையாக நடந்து வரு கிறது. இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத் தைக் கைப்பற்ற டெல்லி, ஐதராபாத், மும்பை, பெங்களூர் உட்பட 8 அணிகள் களம் இறங்கி உள்ளன.
மேற்படி அணிகளில் உலகின் சிறந்த நட்சத்திர மற்றும் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இடம் பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்களுட ன் இந்திய வீரர்களும் பங்கேற்று வருகி ன்றனர்.
முதல் முறையாக நடந்து வரும் இந்தப் போட்டியில் பங்கேற்று வரும் முன்ன ணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகி ன்றனர்.
இதில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஐதராபாத் மற்றும் அவாத்தே அணிகள் மோதின. இந்த ஆட்டம் பரப ரப்பாக இருந்தது.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஐதராபாத் தைச் சேர்ந்த டனோன்சாக் 15 -21 ,21 - 14, 11 -9 என்ற கணக்கில் அவா த்தே யைச் சேர்ந்த குருசாய் தத்தை தோற்க டித்தார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் ஐதராபாத் அணியைச் சேர்ந்த சாய்னாவும், அவா த்தே அணியைச் சேர்ந்த சிந்துவும் மோதினர். இதில் சாய்னா 21-19, 21-8 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் அவாத் தே அணி பதிலடி கொடுத்தது. மர்ஹி ஸ் கிடோ மற்றும் மத்தியாஸ் ஜோடி 21-14, 21-20 என்ற கணக்கில் ஹோக் மற் றும் லிம் இணையை வீழ்த்தியது.
தொடர்ந்து நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவிலும் அவாத்தே அணி அசத்தியது. அந்த அணியின் ஸ்ரீகாந்த் 21 -17, 21 -19 என்ற கணக்கில் அஜெய் ஜெயராமை (ஐதராபாத்)தோற்கடித்தார். இதனால் ஆட்டம் 2 -2 என்ற கணக்கில் சமனிலை பெற்றது.
கடைசியாக நடந்த கலப்பு இரட்டைய ர் பிரிவில் ஐதராபாத்தைச் சேர்ந்த ஹோக் மற்றும் பிரதன்யா ஜோடி 21 -9, 19 - 21, 11 -8 என்ற கணக்கில் மார்சிஸ் கிடோ மற்றும் சபஸ்ஸ்ரீ (அவாத்தே) இணையை வீழ்த்தியது. இதனால் ஐத ராபாத் அணி 3 -2 என்ற கணக்கில் வெ ற்றி பெற்றது.
மற்றொரு ஆட்டத்தில் மும்பை அணி 3-2 என்ற கணக்கில் பெங்களூர் அணியை தோற்கடித்து முன்னிலை பெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்