முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் இன்று பா.ஜ.க மாநில முதல்வர்கள் மாநாடு

ஞாயிற்றுக்கிழமை, 8 மே 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,மே.- 9 - பா.ஜ.க. மாநில முதல்வர்களின் மாநாடு டெல்லியில் இன்று தொடங்குகிறது. தற்போதைய அரசியல் சூழ்நிலை, திறன்மிக்க அரசு நிர்வாகம் உள்ளிட்ட அம்சங்கள் மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளன என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும், செய்தி தொடர்பாளருமான ஜகத் பிரகாஷ் நட்டா தெரிவித்தார். இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது,
நாளை 10 ம் தேதி நிறைவடையும் இந்த மாநாட்டுக்கு கட்சியின் தேசிய தலைவர் நிதின் கட்காரி தலைமை வகிக்கிறார். கர்நாடகம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொள்வார்கள். கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மாநாட்டு நிறைவுரையாற்றுகிறார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லி, கட்சியின் முன்னாள் தலைவர் ராஜ்நாத்சிங், முரளிமனோகர் ஜோஷி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
பா.ஜ.க ஆளும் மாநிலங்களை மாற்றாந்தாய் போக்குடன் மத்திய அரசு நடத்துகிறது. மாநாட்டின் முதல் நாளன்று இது குறித்து விரிவாக விவாதிக்கப்படும். அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை கொண்டு வர செய்தி, தகவல் தொடர்பு, தொழில்நுட்பம் ஆகியவற்றை எப்படி ஆக்கபூர்வமாக பயன்படுத்தலாம் என்பது குறித்து 2 ம் நாள் மாநாட்டில் ஆலோசிக்கப்படும். மாநாட்டின் இறுதியில் உறுதிமொழி சாசனம் வெளியிடப்படும் என்றார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்