முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரோகன் - எடோவர்டு ஜோடி அரை இறுதிக்கு முன்னேற்றம்

சனிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2013      விளையாட்டு
Image Unavailable

 

சின்சினாட்டி, ஆக. 18 - அமெரிக்காவில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஆட வர் இரட்டையர் காலிறுதிச் சுற்றில் ரோகன் பொபண்ணா ஜோடி வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத் தில் லியாண்டர் பயஸ் மற்றும் ஸ்டீ பானிக் ஜோடி தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது. 

ஆடவருக்கான ஏ.டி.பி. மற்றும் மகளி ருக்கான டபிள்யு.டி.ஏ. ஆகிய 2 சங்க மும் இணைந்து முக்கிய நகரமான சின் சினாட்டியில் டென்னிஸ் போட்டியை நடத்தி வருகின்றன. 

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத் தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற் றும் வீராங்கனைகள் களம் இறங்கி உள்ளனர். இந்தப் போட்டி அரை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. 

முக்கிய போட்டிகளில் ஒன்றான இதில் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மகி ழ்வித்து வருகின்றனர். 

ஆடவருக்கான இரட்டையர் பிரிவின் கால் இறுதி ஆட்டம் ஒன்று நடந்தது. இதில் ரோகன் பொபண்ணா மற்றும் எடோவர்டு ஜோடியும், லியாண்டர் மற்றும் ஸ்டீபானிக் இணையும் மோ தின. 

இந்தப் போட்டியில் இந்திய மற்றும் பிரான்ஸ் ஜோடி அபாரமாக ஆடி 6-3, 6-7(3), 10-8 என்ற செட் கணக்கில் இந்தி ய மற்றும் செக். இணையை வீழ்த்தி யது. 

அடுத்து நடக்க இருக்கும் அரை இறுதி யில் ரோகன் மற்றும் எடோவர்டு ஜோடி ஸ்பெயினைச் சேர்ந்த மார்செல் மற்றும் லோபஸ் இணையுடன் மோத உள்ளது. 

இந்திய வீரர் பொபண்ணா தொடர்ந்து 2-வது முறையாக சின்சினாட்டி போட்டியில் இறு திச் சுற்றுக்கு தகுதி பெறு வாரா என்பது அரை இறுதியின் முடி வைப் பொறுத்து தெரிய வரும். 

மற்றொரு காலிறுதியில் மார்செல் மற் றும் லோபஸ் ஜோடி 6-4, 6-2 என்ற செ ட் கணக்கில் போல்ஸ் மற்றும் மார்சின் இணையை தோற்கடித்தது. 

ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் கா லிறுதியில் உலக நம்பர் - 1 வீரரான நோவக் ஜோகோவிக்கும், அமெரிக்க வீரரும் மோதினர். 

இதில் அமெரிக்க வீரர் ஐஸ்னோவர் சிறப்பாக ஆடி, 7-6(5),3-6,7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று ஜோகோவி க்கிற்கு அதிர்ச்சி அளித்தார். 

ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலும், சுவி ஸ் வீரர் ரோஜர் பெடரரும் மற்றொரு காலிறுதியில் மோதினர். இதில் நடால் 5-7, 6-4, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெ ற்றார். 

மகளிர் ஒற்றையர் பிரிவில் உலக நம்பர் - 1 வீராங்கனையான செரீனா வில்லிய ம்ஸ் 6 -0, 6 -4 என்ற நேர் செட் கணக்கி ல் ருமேனிய வீராங்கனை சிம்மோனா வை தோற்கடித்து அரை இறுதிக்கு முன்னேறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்