முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று காலை 9 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள்

ஞாயிற்றுக்கிழமை, 8 மே 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே.- 9 - பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று (9ம் தேதி) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  கடந்த மார்ச் மாதம் நடந்த  பிளஸ்​2 தேர்வை 7 லட்சத்து 23 ஆயிரத்து 545  மாணவ​ மாணவிகள் எழுதினார்கள். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தனி தேர்வர்களாக எழுதினார்கள். இவர்களது விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் கடந்த மாதம் 19​ந்தேதி முடிவடைந்தது. அதன் பிறகு டேட்டா சென்டர்கள் மூலம் மதிப்பெண்களை பதிவு செய்யும் பணியும், பிழைகளை திருத்தும் பணியும் நடந்தது. அனைத்து பணிகளும் முடிவடைந்து,  தேர்வு முடிவுகள் இன்று(9ம் தேதி) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது. சென்னை எழும்பூரில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்கக வளாகத்தில் தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி  வெளியிடுகிறார். இணைய தளங்களிலும் அதே சமயத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. மேலும் எஸ்.எம்.எஸ்.மூலம் முடிவுகளை தெரிந்துகொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் பள்ளிகளிலும் மாணவர்கள் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் குறித்த முழு விவரம், அந்தந்த பள்ளிகளிலேயே காலை 10 மணிக்கு அறிவிப்பு பலகைகளில் ஒட்டப்படும்.  இதற்காக பள்ளிகளுக்கான மதிப்பெண் பட்டியல், சி.டி.க்கள் அனுப்பி  வைக்கப்பட்டன.
மார்க் ஷீட்டுகளை வருகிற 25ம் தேதி பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் பெற்றுக்கொள்ளலாம். தனித்தேர்வர்கள், தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் மார்க் ஷீட்டுகளை பெறலாம். பிளஸ்​2 தேர்வு முடிவுகளை அரசின் இணையதளங்களான சிடூஙுடீஙூசீங்சிஙூ.டூடுஷ.டுடூ, க்ஷகிடீ1.சிடூ.டூடுஷ.டுடூ, க்ஷகிடீ2.சிடூ.டூடுஷ.டுடூ, க்ஷகிடீ2.சிடூ.டூடுஷ.டுடூ, சூசூசூ.சிடூஙீசீஸங்டுஷங்டுஸஙுஹஙுடுடீஙூ.கிச்சு.டுடூ  ஆகிய இணைய தள முகவரிகளில் தேர்வு முடிவுகளை பார்க்கலாம். 53344, 53030, 57799 மற்றும் 57777 ஆகிய எண்களில் எஸ்.எம்.எஸ். அனுப்பியும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்