முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் கிரிக்கெட் முடிவுக்கு 20 ஓவர் போட்டியே காரணம்

ஞாயிற்றுக்கிழமை, 18 ஆகஸ்ட் 2013      விளையாட்டு
Image Unavailable

 

பெங்களூர், ஆக.19 - டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முடி வுக்கு 20 ஓவர் போட்டியே காரணம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கர் தெ ரிவித்தார். கர்நாடக கிரிகக்கெட் சங்கத்தின் பவள விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட டெண்டுல்கர் இடையே நிருபர்களைச் சந்தித்த போது மேற்கண்டவாறு கூறினார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்த தாவது - கிரிக்கெட் விளையாட்டில் மட்டுமே 20 ஓவர், ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் என்ற 3 நிலைகள் உள்ளன. 

20 ஓவர் போட்டி மிகவும் பிரபலமானது. ஏனெனில் 3 பந்தில் ஹீரோவாகி விடலாம். 20 ஓவர் போட்டியின் தாக்கம் காரணமாகவே தற்போது டெ ஸ்ட் போட்டியில் அதிகமான  முடிவு கள் ஏற்படுகிறது. 

20 ஓவர் போட்டிக்கு முன்பு பெரும் பாலான டெஸ்டுகள் டிராவில் முடிந் தன. ஆனால் டெஸ்ட் போட்டியில் அடிப்படை தான் ஒரு நாள் ஆட்டமா கும். இவ்வாறு டெண்டுல்கர் கூறினார். 

கங்குலி கூறும் போது, 20 ஓவர் போட்டியின் தாக்கம் ஒரு நாள் போட்டியி லும் டெஸ்டிலும் உள்ளது. ராகுல் டிராவிட் கூறுகையில் 3 நிலையில் விளையாடுவது தான் சிறந்தது . அடிப்ப டையில் டெஸ்டில் ஆடுவது தான் முக்கியம் என்றார்.

கர்நாடக கிரிக்கெட் சங்க விழாவில் டெண்டுல்கர் தவிர, முன்னாள் கேப்டன் கள் செளரவ் கங்குலி, டிராவிட் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் சிலரும் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்