முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆக்ராவில் விவசாயிகள் போராட்டம் வன்முறை: பலி எண்ணிக்கை உயர்வு

ஞாயிற்றுக்கிழமை, 8 மே 2011      இந்தியா
Image Unavailable

ஆக்ரா, மே. - 9 - கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு கூடுதல் விலை கொடுக்கக்கோரி ஆக்ரா, நொய்டா ஆகிய பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனையொட்டி நடந்த வன்முறை, போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். இதனால் உத்திரப்பிரதேச மாநிலம் முழுவதும் பதட்டம் அதிகரித்துள்ளது.
யமுனா எக்ஸ்ரயில் பாதை அமைப்பதற்காக விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு உத்தரப்பிரதேச மாநில அரசு குறைந்த அளவிலேயே நஷ்டஈடு கொடுத்துள்ளதாகவும் நஷ்டஈடு தொகையை அதிகரிக்க வேண்டும் என்று கோரி விவசாயிகள் அலிகார் பகுதியில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் நேற்று ஆக்ரா பகுதிக்கும் பரவியது. போலீசாருடன் விவசாயிகள் பல இடங்களில் மோதலில் ஈடுபட்டனர். பல மோட்டார் வாகனங்களை விவசாயிகள் தீவைத்து கொளுத்தினர். மேலும் நொய்டா பகுதியில் விவசாயிகள் போராட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. ஆக்ராவில் உள்ள செளகான் கிராம பகுதியில் விவசாயிகள் கலவரத்தில் ஈடுபட்டதால் போலீசார் 4 பேர் படுகாயம் அடைந்தனர். விவசாயிகள் வன்முறையில் ஈடுபட்டதில் போலீசார் 4 பேர் படுகாயம் அடைந்தனர். ஆத்திரம் அடைந்த கிராமப்பகுதி விவசாயிகள் வன்முறையில் ஈடுபட்டதில் போலீசார் 4 பேர் படுகாயம் அடைந்தனர் என்று சட்டம்-ஒழுங்கு பிரிவு சிறப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் பிரிஜ் லால் நேற்று லக்னோவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். நேற்றுமுன்தினம் ஏற்பட்ட கலவரத்தில் காயம் அடைந்த கலு என்பவர் காயம் அடைந்தார். இந்த நிலையில் அவர் நேற்று உயிரிழந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்