முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியன் ஓபன் பேட்மிண்டன்: பங்கா பீட்க் அணி வெற்றி

திங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2013      விளையாட்டு
Image Unavailable

 

லக்னோ, ஆக. 20 - இந்தியன் ஓபன் பேட்மிண்டன் லீக் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் பங்கா பீட்ஸ் அணி அபார வெற்றி பெ ற்று இந்தத் தொடரில் முன்னிலை பெ ற்று உள்ளது. லக்னோவில் நடந்த இந்த லீக் ஆட்டத் தில் பங்கா பீட்ஸ் அணி 4-1 என்ற கண க்கில் அவாதே வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது. 

இந்தப் போட்டியில் முன்னணி வீரரா  ன பி. கஷ்யப் காலில் காயம் அடைந்தி ருந்தபோதிலும், வலியுடன் ஆடி பங் கா பீட்ஸ்  அணிக்கு வெற்றி தேடித் தந் தார். 

ஆனால் சமீபத்தில் உலக பேட்மிண்ட ன் போட்டியில் வெண்கலம் வென்று சாதனை படைத்த பி.வி. சிந்து இந்த ஆட்டத்தில் மோசமாக ஆடினார். இதனால் அவாதே அணி தோல்வியை த் தழுவியது. 

முதலாவது இந்தியன் ஓபன் பேட்மிண்டன் லீக் போட்டி டெல்லியில் கடந்த வாரம் துவங்கியது. தற்போது லக் னோவில் நடந்து வருகிறது. 

இதில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற உலகின் தலைசிறந்த முன்னணி வீரர் கள் மற்றும் வீராங்கனைகள் களத்தில் குதித்து உள்ளனர். அவர்களுடன் இந்தி ய வீரர் மற்றும் வீராங்கனைகளும் பங் கேற்று வருகின்றனர். 

இதில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி அணிகள் களம் இறங்கி உள்ளன. இந்தப் போட்டி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டு இரு க்கிறது. 

மாலையில் நடைபெற்ற ஆட்டத்தில் அவாதே அணி ஆடவர் இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் மத்தியாஸ் போ மற்றும் கிடோ மார்கிஸ் இருவரும் சிறப்பாக ஆடி மேற்படி வெற்றியைப் பெற்றுத் தந்தனர். 

போ மற்றும் கிடோ ஜோடி இந்த ஆட்டத்தில், 21-14, 21-19 என்ற கணக்கில் காஸ்டன் மற்றும் தேவால்கர் இணையை வென்றது. இந்தப் போட்டியில் அவாதே அணி பெற்ற ஒரே வெற்றி இது தான். 

முன்னதாக நடந்த முதல் ஆட்டத்தில் பங்கா அணி வெற்றி பெற்றது. இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பங்கா அணி தரப்பில் ஹூயுன் 21-11, 21-20 என்ற கணக்கில் வாரியர்சைச் சேர்ந்த வெய் பெய்சாங்கை தோற்கடித்தார். 

முதல் ஆட்டத்தில் பெற்ற வெற்றி மகி ழ்ச்சியுடன் பங்கா அணி அடுத்த ஆட்டத்திலும் சிறப்பாக ஆடி செட்டை தனது வசமாக்கியது. 

இதன் மகளிர் ஒற்றையர் பிரிவில் பங் கா அணி தரப்பில் கரோலினா மாரி னும், வாரியர்ஸ் அணி சார்பில் வளர்ந்து வரும் வீராங்கனையான பி.வி.சிந் துவும் மோதினர். 

இதில் மரின் சிறப்பாக ஆடி 21-14, 21-19 என்ற கணக்கில் சிந்துவை தோற்க டித் தார். உலக சாம்பியன்ஷிப்பில் சிறப்ப ாக ஆடி பதக்கம் வென்ற போதிலும் சிந்துவால் இந்தத் தொடரில் நன்றாக ஆட முடியவில்லை. 

முன்னதாக நடந்த முதல்லீக் ஆட்த்தில் வாரியர்ஸ் அணி ஐதராபாத் ஹாட் ஷாட் அணியிடம் தோற்ஹது. இதில் 18 வயதான சிந்து சாய்னா நெக்வாலிடம் தோற்றார். 

அடுத்து நடந்த ஆட்டத்தில் கஷ்யப் 20-21, 21- 11,11-9 என்ற கணக்கில் இளம் வீரரான ஸ்ரீகாந்தை தோற்கடித்தார். இந்த ஆட்டத்தின் போது, கஷ்யப்பிற்கு 100 சதவீதம் உடற்தகுதி இல்லாத போதிலும், தனது அனுபவத்தை திரட்டி போராடி வெற்றி பெற்ஹார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்