முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய எல்லைப் பகுதியில் பறந்த மர்மப்பொருள் ஊடுருவலா?

திங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக.20 - சீனாவை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாடு பகுதியான லடாக்கில் பறக்கும் தட்டுபோன்ற பொருள் மீண்டும் பறந்ததைப் பார்த்ததாக இந்திய ராணுவ வீரர்கள் தெரிவித்தனர். இதுபற்றி ராணுவ தலைமையகத்துக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். சீனாவின் எல்லையை ஒட்டிய உயர்ந்த மலைப்பிரதேசமான லடாக்கின் லகான், ஹேல் பகுதியில் கடந்த 4-ம் தேதி அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுபோன்ற பொருள் பறந்ததை பார்த்ததாகவும், அது சுமார் 4 மணி நேரம் பறந்ததாகவும்  ராணுவ வீரர்கள் தெரிவித்தனர்.ஆனால் பறந்த பொருள் விமானமா என்பது தெளிவாகத்

தெரியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து சீனாவை ஒட்டியுள்ள எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களில் சீனாவை ஒட்டிய லடாக் பகுதியில் இதுபோன்ற அடையாளம் தெரியாத பொருள் பல தடவை பறந்ததாக அங்கு முகாமிட்டுள்ள ராணுவ வீரர்கள் தெரிவித்தனர். அது விமானமா என்பதை அவர்களால் யூகிக்க முடியவில்லை. 

இகுபற்றி ஆய்வு செய்த இந்தியாவின் உயரிய ஆய்வு நிறுவனமோ  லடாக் போன்ற உயர்ந்த மலை, மெல்லிய காற்று மண்டலப் பகுதியில் வியாழன், வெள்ளி ஆகிய கோள்கள் கண்களுக்குத் தெளிவாகத் தெரியும். இதை ராணுவ வீரர்கள் தவறாகப் புரிந்து கொண்டனர் என்று கூறியதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இதுபற்றி நாடாளுமன்றத்தில் பதில் அளித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, லடாக் பகுதியில் அடையாளம் தெரியாத பொருள் பறந்ததாக அங்குள்ள ராணுவ வீரர்கள் தகவல் தந்தது உண்மை. ஆனால் அது சீனாவின் ஊடுருவல் என்பதை அவர்களால் உறுதிப்படுத்த முடியவில்லை என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்