முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க அதிகாரிகளுடன் சிவசங்கர் மேனன் சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 20 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

 

வாஷிங்டன், ஆக.21 - பிரதமர் மன்மோகன்சிங் செப்டம்பர் மாதம் அமெரிக்கா செல்ல உள்ளார். இதுதொடர்பாக அமெரிக்க அதிகாரிகளுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன்  ஆலோசனை நடத்தினார்.

பிரதமர் மன்மோகன்சிங் செப்டம்பர் மாதத்தில் 6 நாள் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார். 

இதற்காக அமெரிக்கா சென்ற  சிவசங்கர் மேனன் அமெரிக்க துணை அமைச்சர் பர்ன்ஸ் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்தார். அப்போது அவர் பிரதமரின் சுற்றுப்பயணம் பற்றி விவாதித்தார். அமெரிக்கா செல்லும் மன்மோகன்சிங் அங்கு இருதரப்பு உறவு, அணு ஆயுத ஒப்பந்தம், பிராந்திய பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு பற்றி  விவாதிப்பார் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சிவசங்கர் மேனன், அமெரிக்க அமைச்சர் பர்ன்ஸூடன் பலமுறை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். மும்பை துறைமுகத்தில் நடந்த நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து சிதறி 18 பேர் இறந்ததற்கு பர்ன்ஸ் தனது ஆழ்ந்த அனுதாபத்கை தெரிவித்தார்.

செப்டம்பர் மாதம் 20-ம்தேதி பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்கா வுக்கு 6 நாள் பயணமாகச் செல்கிறார். ஐ.நா. சபை கூட்டத்தில் பங்கேற்தச் செல்லும் அவர் அமெரிக்க அதிபர் ஒபாமாவை வாஷிங்டனில் சந்தித்துப் பேசுவார். அப்போது இருதரப்பு உறவு பற்றி அவர்கள் இருவரும் பேசுவார்கள் என்று ஒரு அதிகாரி  கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்