முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கத்திரிவெயிலின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழகம்

திங்கட்கிழமை, 9 மே 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை, மே - 9 - கத்திரி வெயிலின் வெப்பம் தாங்காமல் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பெரும் அவஸ்தையில் தத்தளிக்கின்றனர். சென்னையில் நேற்று வெப்பத்தின் அளவு 107 டிகிரியாக இருந்தது. தமிழகம் முழுவதும் கோடை வெப்பம் இம்முறை கடுமையாக தாக்கி வருகிறது. ஆரம்பத்தில் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் முழுவதும்  சிறிதளவு மழை பெய்து சற்று ஆறுதல் அளித்தது. இதனால் வெயிலின் கடுமை சற்று தணிந்திருந்தது. ஆனால் கடந்த 4 ம் தேதி அக்கினி நட்சத்திரம் என்னும் கத்திரிவெயில் காலம் துவங்கியது. இதனால் வெயில்  கொளுத்த ஆரம்பித்தது. இதனால் மீண்டும் தமிழகம் முழுவதையும் வெயிலின் உஷ்ணம் கடுமையாக வாட்டி வருகிறது.  நேற்று சென்னையில் வெப்பத்தின் அளவு 107 டிகிரியாக இருந்தது. இதனால் வெயிலின் கொடுமை தாளாமல் பகல் பொழுதில்  மக்கள் வீடுகளிலேயே முடங்கினர். சாலைகள் பெரும்பாலும் வெறிச்சோடின. மாலையில் கடற்கரையை தேடி மக்கள்  ஓட ஆரம்பித்தனர். வேலூரிலும் கடும் வெப்பம் இருந்தது.  மதுரையில் நேற்றைய வெயிலின் அளவு 100 டிகிரியாக இருந்தது. வெப்பத்தை தணிக்க மக்கள் குளிர்பான கடைகளில் குவிந்தனர். சைக்கிள் போன்ற இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்களின் பாடு படு திண்டாட்டமாக இருந்தது. வீசும் காற்றும் அனல்  காற்றாக இருந்ததால் வாகனங்களை ஓட்டுபவர்கள் பெரும் அவஸ்தைக்கு உள்ளாயினர். கத்திரி வெயிலின் துவக்கமே மக்களை துவண்டு விழச் செய்துவிடும் நிலையில் உள்ளது. இந்த கத்திரி வெயில் வரும் 29 ம் தேதி வரை உள்ளது என்பது மக்களுக்கு இன்னும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வருணபகவான் கண்திறந்தால் மட்டுமே மக்கள் இந்த கோடை வெயிலின் அபரிமிதமான வெப்பத்தில் இருந்து விடுபட முடியும்.    
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்