முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூஹெவன் டென்னிஸ்: சானியா முதல் சுற்றில் வெற்றி

செவ்வாய்க்கிழமை, 20 ஆகஸ்ட் 2013      விளையாட்டு
Image Unavailable

 

நியூயார்க், ஆக. 21 -  அமெரிக்காவில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் போட்டியில் மக ளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா ஜோடி வெற்றி பெற்று 2-வது சுற்று க்கு முன்னேறியது. மகளிருக்கான டபிள்யு.டி.ஏ. சங்கம் சா ர்பில், நியூஹெவன் நகரில் சுற்றுப் பய ணப் போட்டி நடந்து வருகிறது. இது தற்போது காலிறுதியை நோக்கி முன் னேறி வருகிறது. 

இதில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீராங்கனைகள் களத்தில் குதித்து உள்ளனர். இந்தப் போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டு இரு க்கிறது. 

முக்கிய போட்டியான இதில் பங்கேற் று வரும் முன்னணி வீராங்கனைகள் தர மான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிக ர்களை மகிழ்வித்து வருகின்றனர். 

மகளிருக்கான இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதில் சானியா மிர்சா மற்றும் ஷெங்க் ஜோடியும், போலந்து மற்றும் ஜார்ஜி யா இணையும் மோதின. 

இதில் இந்திய மற்றும் சீன ஜோடி அபாரமாக ஆடி, 6 -3, 3 -6,10 -8 என்ற செட் கணக்கில் போராடிரோல்ஸ்கா மற் றும் கலாசிஸ்கோவா இணையை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறியது. 

இதன் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதில் ரஷ்ய வீராங்கனையான மகரரோவாவும், கனடா வீராங்கனையும் மோதினர். 

இந்தப் போட்டியில் ரஷ்ய வீராங்கனை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கனடா வீராங்கனையை திணற வைத் தார். இறுதியில் அவர் 6-2, 2-6, 7-6 என்ற செட் கணக்கில் வோஸ்னியாக்கியை வீழ்த்தினார். 

ருமேனிய வீராங்கனை சிம்மோனாவு ம், சுலோவேக்கிய வீராங்கனையும் மற்றொரு முதல் சுற்று ஆட்டம்  ஒன்றி ல் மோதினர். 

இதில் ருமேனிய வீராங்கனை நன்றாக ஆடி 6-2 , 6-1 என்ற செட் கணக்கில் டே னிலா ஹண்ட்சோவாவை தோற் கடி த்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். 

வின்ஸ்டன் நகரில் நடந்து வரும் ஆட வர் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ் (இந்தியா) மற்றும் டேனியல் நெஸ்டர் (கனடா ) ஜோடியும், ஆஸ்திரிய இணையும் மோதின. 

3 செட்வரை நீடித்த இந்த ஆட்டத்தில் இந்திய மற்றும் கனடா ஜோடி வெற்றி க்காக கடுமையாக போராடியது. இறு தியில் இந்த ஜோடி 6 -1, 3 -6,10 -2 என்ற செட் கணக்கில் ஜூலியன் நோவல் மற்றும் மெல்சர்  இணையை தோற்க டித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்