முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.வி. மீது சுங்க வரி: வெளிநாடு வாழ் இந்தியர்கள் எதிர்ப்பு

வியாழக்கிழமை, 22 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

 

துபை, ஆக.23 - வெளிநாடுகளிலிருந்து, இந்தியாவுக்கு வருபவர்கள் வாங்கி வரும் தொலைக்காட்சி  பெட்டிகளுக்து 35 சதவீத சுங்க வரி விதிப்பது என்ற மத்திய அரசின் முடிவுக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.வெளிநாடு வாழ் இந்தியர்களும், மற்ற விமானப் பயணிகளும் எற்கெனவே ரூ.35,000 வரையிலான தொலைக்காட்சி பெட்டிகளை  வரி ஏதுமின்றி இந்தியாவுக்கு எடுத்து வர முடியும் என்ற நிலை இருந்து வந்தது.

எனினும் ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதியிலிருந்து, இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்படும் தொலைக்காட்சி பெட்டிகள் மீது 35 சதவீத சுங்கவரி செலுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

அரசின் இந்த முடிவை வெளிநாடு வாழ் இந்தியர்கள் விமர்சித்துள்ளனர். இது தொடர்பாக ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த  வெளிநாடு வாழ் இந்தியர்கள் நல அறக்கட்டளையின் தலைவர் சம்சுதீன் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மாவுக்கு கடிதம்எழுதியுள்ளார். அதில் டி.வி. உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்கள் மீது சுங்க வரி விதிப்பதற்குப் பதிலாக இப்பொருள்களைக் கொண்டு வர விரும்புவோர் அதற்கான வரிப்பிடித்தம் இல்லாத தொகையை 

வெளிநாட்டுக் கரன்சியில் செலுத்திவிட்டு இந்தியாவில் அதைப் பெற்றுக்கொள்ளச் செய்யலாம். ஏற்றுமதி விலையில் அவை கொண்டுவரப்படும் வகையில் ஏற்பாடு செய்யலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக துபையில் தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியராகப் பணிபுரியும் இந்தியர் ஒருவர் கூறுகையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் டி.வி. போன்ற பொருள்களை வரிப்பிடித்தம் இன்றி இந்தியாவுக்கு எடுத்துச் செல்வதை அரசு அனுமதிக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் இப்பொருள்களைப் பெரும்பாலும் உறவினர்கள் அல்லது நண்பர்களுக்குப் பரிசாக அளிக்கவே எடுத்துச் செல்கின்றனர் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்