முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். பார்லிமென்டில் இந்தியாவை கண்டித்து தீர்மானம்

வியாழக்கிழமை, 22 ஆகஸ்ட் 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஆக.23 - எல்லைக் கட்டுப்பாடு பகுதியில் போர் ஒப்பந்தத்தை மீறி இந்தியா நடந்துள்ளது என்று கூறி பாகிஸ்தான் பார்லிமென்டில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானத்தை பாதுகாப்பு அமைச்சர் ரானாதன்வீர் சபையில் கொண்டு வந்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்தியா நமது நிலைகள் மீது குண்டு வீசி தாக்கியுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. இது போர் ஒப்பந்தத்தை மீறிய செயலாகும். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் ஆக்கிரமிப்புக்கு ஒப்பானதாகும் என்றார். இதையடுத்து சபையில் ஏகமனதாக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவம் சுட்டதில் பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த கேப்டன் சர்பரஸ்கான் இறந்தார் என்றும். அவருக்கு சபை அஞ்சலி செலுத்துவதாகவும், எனவே பாகிஸ்தான் ராணுவத் தலைமை நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் அது கேட்டுக்காண்டது. கடந்த வாரம் இதுபோன்று ஒரு தீர்மானம் இதே சபையில் நிறைவேற்றப்பட்டது. தற்போதும் இப்படி ஒரு கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது இரண்டாவது தீர்மானமாகும்.

    எல்லைக் கட்டுப்பாடு பகுதியில் நிலவும் பதற்றத்தை தணிப்பதற்காக அமைச்சரவையின் உயர்ந்த அங்கமான தீர்மானம் நிறைவேற்றும் பாதுகாப்புக்குழு நேற்று கூடியது. பாகிஸ்தானில் உள்ள படல், நக்யால் ஆகிய பகுதிகளில்  தேவையில்லாமல் இந்தியா துப்பாக்கித் சூடு நடத்தியது என்று பாகிஸ்தான் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  2003-ம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தை இரு நாடுகளும் மீறி ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். எல்லைக் கட்டுப்பாடு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் துருப்புகள் தாக்கியதில் இந்திய வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து எல்லையில் பதற்றம் அதிகரித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்