முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரசாயன குண்டு வீசவில்லை: சிரியா அரசு மறுப்பு

வியாழக்கிழமை, 22 ஆகஸ்ட் 2013      உலகம்
Image Unavailable

 

டமாஸ்கஸ், ஆக.23  - ரசாயன குண்டு வீசவில்லை என்று சிரியா அரசு  மறுப்பு தெரிவித்துள்ளது. சிரியாவில் ராணுவம் ரசாயன குண்டு வீசியதில் 1300 பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. ஆனால் அரசு தரப்பில் இதை மறுத்துள்ளனர்.

சிரியாவில் அரசுத் தரப்பு ராணுவத்துக்கும், புரட்சிப் படைக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. குர்ஷித் இன மக்கள் புரட்சிப் படை உதவியுடன் போராடி வருகிறார்கள். போராட்டக்காரர்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. ராணுவத்தின் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.  2 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறி ஈராக்கில் அகதிகளாக தங்கியுள்ளனர். ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சிரியாவின் நிலவரத்தை அறிய ஐ.நா. குழுவினர் டமாஸ்கஸ் வந்துள்ளனர். 

சிரியா அரசு ரசாயன தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா ஏற்கெனவே எச்சரித்திருந்தார். இந்நிலையில் டமாஸ்கஸ் புறநகர் பகுதியில் வீசப்பட்ட ரசாயன குண்டு வீச்சில் 1300 பேர் இறந்தனர். இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்