முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விக்கிலீக்ஸூக்கு தகவல் அளித்தவருக்கு 35 ஆண்டு சிறை

வியாழக்கிழமை, 22 ஆகஸ்ட் 2013      உலகம்
Image Unavailable

 

போர்ட்மியாட், ஆக.23 - விக்கி லீக்ஸ் இணைய தளத்துக்கு அமெரிக்க ராணு, அரசுத் துறை ரகசியங்களை தெரிவித்த அந்நாட்டு ராணுவ வீரருக்கு 35 ஆண்டுசிறைத்தண்டனை விதித்து ராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே  நடத்தி வரும் விக்கி லீக்ஸ் இணையதளம் அமெரிக்காவின் ரகசிய நடவடிக்கைகளை  ஆதாரங்களுடன் சேகரித்து அவற்றை வெளி உலகுக்கு  அம்பலப்படுத்தியது.

அந்த இணைய தளத்துக்கு அமெரிக்க ராணுவ வீரர் பிராட்லி மேனிங் பல்வேறு ரகசிய தகவல்களை அளித்து குற்றம் புரிந்ததை கடந்த வாரம் நீதிமன்றம் உறுதிசெய்தது. உளவு சட்டத்தை மீறுதல் உள்ளிட்ட 20 குற்றச்சாட்டுதள் அவர் மீது சுமத்தப்பட்டது. அவருக்கு 60 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வேண்டுமென அரசுத் தரப்பில் வாதாடப்பட்டது. மேனிங் வெளியிட்டதாகக் கூறப்படும் சில ஆவணங்கள், பின்னர் அரசால் பகிரங்கப்படுத்தப்பட்டவைதான். எனவே அவருக்கு 25 ஆண்டுதளுக்கு மேல் தண்டனை தரப்படக்கூடாது என்று மேனிங் வழக்கறிஞர் வாதிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்