முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பையில் பத்திரிகை பெண் போட்டோகிராபர் கற்பழிப்பு

வெள்ளிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

 

மும்பை, ஆக. 24 - மும்பையில் இருந்து வெளியாகும் ஒரு ஆங்கில மாத பத்திரிகையில் 22 வயது பெண் போட்டோ கிராபராக பணியாற்றி வருகிறார். இவர் அந்தப் பத்திரிகையில் தொடர் கட்டுரைகள் எழுதி வந்தார். நேற்று முன்தினம் மாலை 7 மணிக்கு மும்பை மகாலட்சுமி ரெயில் நிலையத்தையொட்டியுள்ள பழங்கால கட்டிடமான சக்தி மில் பற்றி கட்டுரை எழுதுவதற்காக அந்த கட்டிடத்தை படம் பிடிக்கச் சென்றார். அவருடன் துணைக்கு அவர் நண்பரும் சென்றார். 

அப்போது 2 பேர் வந்து போட்டோ எடுக்க அனுமதி வாங்கித் தருவதாக ஏமாற்றி பழைய கட்டிடத்தின் உள்ளே இருவரையும் அழைத்துச் சென்றனர். திடீர் என்று மேலும் 3 பேர் வந்தனர். அவர்கள் பெண் போட்டோகிராபரின் நண்பரை அடித்து தாக்கி கட்டிப் போட்டனர். பின்னர் அந்த பெண்ணை கட்டிடத்தின் உள்ளே இழுத்துச் சென்று மாறி மாறி கற்பழித்தனர். காமுகர்களிடம் இருந்து விடுபட கடுமையாக போராடினார், கூச்சல் போட்டார். ஆனால் அந்த கும்பல் அவரது சத்தம் வெளியே கேட்க விடாமல் செய்தது. 

பின்னர் இருவரையும் அங்கேயே போட்டு விட்டு ரெயில் தண்டவாளம் வழியாக தப்பி ஓடி விட்டனர். அதன்பிறகு ஆண் நண்பரும் அந்தப் பெண்ணும் தட்டுத்தடுமாறி வெளியே வந்தனர். உடனே இருவரையும் ஜஸ்லோக் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் போலீசில் புகார் செய்ப்பட்டது. கும்பல் தாக்குதலில் நண்பருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதே போல் அந்த பெண்ணுக்கு உள்காயமும், அதிகமான ரத்தப்போக்கும் ஏற்பட்டுள்ளது. 

இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களது உயிருக்கு ஆபத்து இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர் என்பதால் மும்பையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஜோஷி மார்க் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். சம்பவம் நடந்த இடத்துக்கு போலீஸ் படை விரைந்து சென்று பார்வையிட்டது. அந்தப் பகுதியைச் சேர்ந்த 45 பேரிடம் விசாரணை நடத்தினார்கள். அதில் 20 பேரை சந்தேகத்தின் பேரில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். 

போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று பாதிக்கப்பட்ட இருவரிடமும் நடந்த சம்பவம் பற்றி விசாரித்து வாக்கு மூலம் பெற்றனர். மும்பை போலீஸ் கமிஷனர் கூறுகையில், கற்பழிப்பு கும்பலைச் சேர்ந்த 8 பேரை சுற்றி வளைத்துள்ளோம். அவர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என்று தெரிவித்தார். கற்பழிப்பில் ்ஈடுபட்ட 5 பேரில் 2 பேர் தங்களுக்குள் ரூபேஷ், சாஜித் என்று அழைத்துக் கொண்டனர் என்று பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம் தெரிவித்தார். இதன் மூலம் அவர்கள் பெயர் விவரம் தெரிய வந்தது. எல்லோரும் குடிபோதையில் இருந்தனர். 

இதையடுத்து போலீசார் அந்தப் பகுதியைச் சேர்ந்த குடிபோதை ஆசாமிகளை தேடிப்பிடித்து விசாரித்து வருகிறார்கள். பெண் போட்டோகிராபர் தெரிவித்த அடையாளங்களை வைத்து 5 குற்றவாளிகளின் உருவப்படத்தை வரைந்து போலீசார் வெளியிட்டுள்ளனர். இவர்களை போலீசார் 18 தனிப்படை அமைத்து தேடுகிறார்கள். மராட்டிய உள்துறை மந்திரி ஆர்.ஆர்.பட்டீல் ஆஸ்பத்திரிக்கு சென்று பெண் போட்டோகிராபரை பார்த்து ஆறுதல் கூறினார்.

மும்பை பெண் போட்டோகிராபர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு சபாநாயகர் மீராகுமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

டெல்லியில் நேற்று நாடாளுமன்ற கூட்டத்துக்கு வருகை தந்த போது செய்தியாளர்களிடம் பேசிய மீரா குமார், மும்பை சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. வன்மையாக கண்டிக்கத்தக்கது. டெல்லி பலாத்கார சம்பவத்துக்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் இத்தகைய குற்றங்களுக்கு எதிராக கடும் தண்டனை வழங்கக் கூடிய மசோதாவை நிறைவேற்றி இருக்கிறோம். அது முழுமையான அளவில் நடைமுறைப்படுத்தப்படும் என நம்பிக்கை கொள்வோம் என்றார். 

இதேபோல் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய பெண்கள் ஆணைய தலைவர் மமதா சர்மா, மும்பை பலாத்கார சம்பவத்தில் ்டுபட்ட குற்றவாளிகள் உடனே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அந்த குற்றவாளிகளுக்கு எதிரான நீதித்துறை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்