முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு

வெள்ளிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஆக. 24 - ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி செய்யும் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு விட்டதாக மாநிலங்களவையில் பா.ஜ.க.-வின் நஜ்மா ஹெப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார்.புனேவில் சமூக சேவகர் நரேந்திர தபோல்கர் படுகொலை செய்யப்பட்டது, தில்லியில் பெண் ஒருவர் கொல்லப்பட்டது போன்ற சம்பவங்களைக் குறிப்பிட்டு அவர் இவ்வாறு பேசினார். அவையின் விவாத நேரத்தின்போது அவர் பேசியதாவது:

தலைநகர் டெல்லியில், திங்கட் கிழமை ஒரு பெண்ணின் கழுத்து அறுக்கப்பட்டிருக்கிறது. செவ்வாய்க்கிழமை, ஆறு கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. இதில் இரண்டு பெண்கள் கழுத்தறுபட்டு இறந்துள்ளனர். ஒரே வீட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

இதற்கு முன்பு டெல்லியில் தினம்தோறும் பாலியல் வன்கொடுமைச் செய்திகளாக வந்துகொண்டிருந்தன. இப்போது கொலைகள், அதிலும் குறிப்பாக பெண்கள் மற்றும் முதியவர்களைக் கொலை செய்வது சர்வ சாதாரணமாகிவிட்டது. எங்கெல்லாம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி செய்கிறதோ, அங்கெல்லாம் சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது.

டெல்லிக்கு விரைவில் தேர்தல் வரவிருப்பதால் அங்கு காங்கிரஸின் ஆட்சி நீண்டநாள்களுக்கு நிலைத்திருக்காது என்று நஜ்மா ஹெப்துல்லா பேசினார். நஜ்மாவின் கருத்துக்களை உள்துறை அமைச்சருக்குத் தெரிவிப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் ராஜீவ் சுக்லா அவருக்கு உறுதியளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்