ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: சிதம்பரம் விளக்கம்

வெள்ளிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஆக. 24 - சர்வதேச பொருளாதார நிலையே, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிக்குக் காரணம் என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை அடைந்து வரும் நிலையில், இது குறித்து நேற்று நிதியமைச்சர் ப. சிதம்பரம் விளக்கம் அளித்தார்.

அப்போது, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைவதைத் தடுக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சந்தையில் பண மதிப்பு என்பது நிலையற்றதாகவே இருக்கும். ஆனால், அதற்காக மத்திய அரசு முதலீட்டு திட்டங்களை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது. இந்தியாவில் தற்போது நிலக்கரி சுரங்கங்கள் பலவும் பணிகளைத் துவக்காமல் உள்ளன. மேலும், இரும்பு தாது சுரங்கங்களும் பணிகளை முழு வீச்சில் நடத்தினால், நிச்சயம் பொருளாதாரம் வளர்ச்சி நிலையை அடையும் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: