300 குவிண்டால் வெங்காயம் தீப்பிடித்து சாம்பல்

வெள்ளிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

நாசிக்,ஆக.24 - 300 குவிண்டால் வெங்காயம் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. இந்த வெங்காயத்தை தீ வைத்துக்கொளுத்திய மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் உள்பட பல மாவட்டங்களில் வெங்காயம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. நாசிக் மாவட்டத்தில் உள்ள மலேகான் தாலுகாவில் இருக்கும் நரதானே கிராமத்தில் ராஜராம் பச்சாவ் என்ற விவசாயி தனது நிலத்தில் விளைந்த வெங்காயம் 300 குவிண்டாலை பதப்படுத்தி வைத்திருந்தார். இந்த வெங்கையாயத்தை அடையாளம் தெரியாத ஒரு ஆசாமி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில் 300 குவிண்டால் வெங்காயம் முழுவதும் எரிந்து சாம்பலாகிவிட்டது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் உள்பட அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தீ வைத்தவனை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் போலீசார்களை வற்புறுத்தி கேட்டுக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: