முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராயல் சேலன்ஜர்ஸ் அதிரடியில் சிதைந்தது கொச்சின் டஸ்கர்ஸ்

திங்கட்கிழமை, 9 மே 2011      விளையாட்டு
Image Unavailable

பெங்களூர், மே - 9 - ராயல் சேலன்ஜர்ஸ் அணியின் அதிரடியால் 9 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாப தோல்வியை சந்தித்தது கொச்சின் டஸ்கர்ஸ்.ஐ.பி.எல். போட்டித் தொடரின் 50 வது போட்டி நேற்று பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில்  நடைபெற்றது. இதில் ராயல் சேலன்ஜர்ஸ் அணியும், கொச்சின் டஸ்கர்ஸ் கேரளா அணியும் மோதின. டாசில் வென்ற கொச்சின் அணி கேப்டன் மகிளா ஜெயவர்த்தனே பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் கிளின்ஜர் மற்றும் மெக்கலம் ஆகியோர் துவக்கத்தில் அதிரடியைக் காட்டினர். அணியின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்தபோது மெக்கலம் 22 ரன்கள் எடுத்த நிலையில் வெட்டோரியின் பந்தில் அருண்கார்த்திக்கால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்ததாக பட்டேல் களமிறங்கினார். அணியின் ஸ்கோர் 8.2 ஓவர்களில் 64 ஆக இருந்தபோது கிளின்ஜர், கிறிஸ்கெய்லின் பந்துவீச்சில் கிளீன்போல்டானார். அடுத்து கேப்டன் மகிளா ஜெயவர்த்தனே களமிறங்கினார். ஆனால் இவர் ரன் குவிக்க தவறினார். 3 ரன்களை மட்டும் எடுத்த ஜெயவர்த்தனே, வெட்டோரியின் பந்தில் விக்கெட் கீப்பர் டிவில்லியர்சால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 72.  தொடர்ந்து ஹாட்ஜ் களமிறங்கினார். மேலும் ஒரு ரன்னை மட்டுமே சேர்த்த நிலையில் 19 ரன்களை எடுத்திருந்த பட்டேல் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதனால் புனே அணி 4 வது விக்கெட்டையும் இழந்தது. தொடர்ந்து ஹாட்ஜ் 5 ரன்களை மட்டும் சேர்த்த நிலையில் அரவிந்தின் பந்துவீச்சில் ஜாஹீர்கானால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தவண்ணம் இருந்ததால் புனே அணியால் ரன் குவிப்பில் ஈடுபட முடியவில்லை. மிடில் ஆர்டரில்  அந்த அணியில் ரவீந்திர ஜடேஜா மட்டும் 41 பந்துகளில் 23 ரன்களை சேர்த்தார். இதனால் கொச்சின் டஸ்கர்ஸ் 20 ஓவர்களின் முடிவில் 125 ரன்களை மட்டும் எடுத்தது. ரமேஷ் பவார் ஆட்டமிழக்காமல் 8 ரன்களையும், பரமேஸ்வரன் 1 ரன்னையும் எடுத்தனர். பெங்களூர் தரப்பில் வெட்டோரி, அரவிந்த் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஜாகீர்கான், கெய்ல், மிதுன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை விரட்டிய பெங்களூர் ராயல் சேலன்ஜர்ஸ் அணியின் துவக்க வீரர்கள் அதிரடியாக துவக்கினர். அதிரடி வீரர் கிறிஸ்கெய்ல் மற்றும் தில்ஷன் ஆகியோர் பந்துகளை பறக்க விட்டனர். அணியின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்தபோது கிறிஸ்கெய்ல் 44 ரன்களை எடுத்திருந்தபோது வினய்குமாரின் பந்தில் விக்கெட்டை இழந்தார். இவரது 44 ரன்களில் 5 சிக்சர்களும், 3 பவுண்டரிகளும் அடங்கும். 3.5 ஓவர்களிலேயே பெங்களூர் அணி 67 ரன்களை குவித்துவிட்டது. தொடர்ந்து இளம் விராட் ஹோக்ளி களம் இறங்கினார். இவரும் தில்ஷானும் புனே அணியின் பந்துவீச்சை எளிதாக கையாண்டனர். இதனால் பெங்களூர் அணிக்கு வெற்றி இலக்கு மிகச் சுலபமானது. அந்த அணி 13.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 128 ரன்களை குவித்தது. தில்ஷான் ஆட்டமிழக்காமல் 52 ரன்களையும், விராட் ஹோக்ளி 27 ரன்களையும் எடுத்திருந்தனர். புனே தரப்பில் வினய்குமார் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். ஆட்ட நாயகனாக கிறிஸ்கெய்ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் 9 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது ராயல் சேலன்ஜர்ஸ் பெங்களூர்  அணி. பரிதாப தோல்வி அடைந்தது கொச்சின் டஸ்கர்ஸ்.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago