காங்., கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும்: சோனியா காந்தி

சனிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக.25 - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு  மீண்டும் 3-வது முறையாக  ஆட்சிக்கு வரும். அடுத்த ஆண்டு மே மாதம் வரை இந்த அரசு பதவியில் இருக்கும். அதற்கு முன்னதாக தேர்தல் வராது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி உறுதியாகக் கூறினார். இந்த கூட்டணி அரசு அதற்கு நிர்ணயித்த காலம் முழுவதும் ஆட்சியில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

புதுடெல்லியில் நடைபெற்ற தேசிய பத்திரிகை மையத்தை துவக்கி வைத்து அவர் பேசுகையில் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரில் உணவு பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி உண்மையான கூட்டணி தானா என்று கேட்கிறீர்கள். ஆம். இது  100 சதவீதம் உண்மையான கூட்டணிதான். இதில் எள் அளவும் சந்தேகம் வேண்டாம். 

நாடாளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் வருமா என்று கேட்கிறீர்கள். உண்மையில் தேர்தல் இப்போது வராது.

மக்கள் எங்களுக்கு இந்த நாட்டை ஆள்வதற்கு 5 ஆண்டுகளுககு அனுமதி அளித்துள்ளனர். எனவே நாங்கள் எங்களுக்கு மக்கள் வழங்கிய 5 ஆண்டுகள் முடியும் வரை, அதாவது எங்களுக்கான பதவிக்காலம் முடியும் வரை ஆட்சியில் இருப்போம். காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசு அதன் ஆயுள்காலம் அதாவது 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சியில் இருக்கும். இதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம். 

 உணவு பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது. எனவே காங்கிரஸ் கட்சி அதை நிறைவேற்றுவதற்குத் தே வையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்த அரசு 2-வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது. இந்த ஆட்சி பற்றி விலைவாசி உயர்வு, ஊழல், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைவு உள்ளிட்ட பல விமர்சனங்கள் வந்துள்ளன. இவற்றை இந்த அரசு சந்தித்து வருகிறது. 

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு ஆள்வதற்கு மக்கள் 5 ஆண்டுகள் வழங்கி உள்ளனர். எனவே இந்த அரசு அதன் 5 ஆண்டுகளயும் பூர்த்தி செய்யும். அதாவது அடுத்த ஆண்டு மே மாதம் வரை இந்த அரசு பதவியில் இருக்கும். அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும் சோனியாகாந்தி நம்பிக்கை  தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: