முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்குவங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தேர்தல்

திங்கட்கிழமை, 9 மே 2011      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா,மே.10 - மேற்குவங்க மாநில சட்டசபைக்கு இன்று இறுதிக்கட்டமாக தேர்தல் நடக்கிறது. 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. தமிழகம்,புதுவை, கேரளம், அசாம், மேற்குவங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகம், புதுவை, கேரளம் ஆகிய மாநிலங்களில் கடந்த ஏப்ரல் மாதம் 13-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. அசாம் மாநிலத்தில் ஏப்ரலில் 2 கட்டமாக தேர்தல் நடந்தது. மேற்குவங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கு 6 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் முதல் 5 கட்ட தேர்தலில் 280 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. 6-வது கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. இன்று கடைசியாக 14 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. 5-வது கட்ட தேர்தல் நடந்த பகுதிகளில் நக்சலைட்கள் மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் இருந்தது மாதிரி இறுதிக்கட்டம் நடக்கும் 14 தொகுதிகளிலும் மாவோயிஸ்ட் ஆதிக்கம் உள்ள பகுதிகளாகும். அதனால் இந்த கடைசி கட்ட தேர்தலிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த 14 தொகுதிகளும் மேற்கு மித்னாப்பூர்,பாங்குரா,புருலியா ஆகிய மாவட்டங்களில் உள்ளன. 14 தொகுதிகளிலும் போட்டியிடும் 97 வேட்பாளர்களின் வேட்பாளர்களின் தலைவிதியை 26 லட்சத்து 57 ஆயிரம் வாக்காளர்கள் இன்று நிர்ணயிக்கிறார்கள். இடது கம்யூனிஸ்ட் தலைவரும் அமைச்சருமான சுசந்தா கோஷ் மற்றும் காங்கிரஸ் தலைவர் ஹேமா செளபாய் ஆகியோர் இறுதிக்கட்ட தேர்தலில் போட்டியிடுகிறார்கள். பல சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள். பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் பாதுகாப்பு படையினர் மற்றும் 700 இணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஏதாவது அவசர நிலை ஏற்பட்டால் உடனடியாக பதில் நடவடிக்கை ஏற்பட்டால் ஹெலிகாப்டர்கள் மற்றும் செயற்கைகோள் தொலைபேசிகள் பயன்படுத்தப்பட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்