முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - பாக். உறவு மேம்பட பேச்சுவார்த்தையே வழி

சனிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஆக. 25 - இந்தியா, பாகிஸ்தான் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கு பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதுதான் ஒரே வழி என்று பாகிஸ்தான் அதிபர் ஆசிடிப் அலி ஜர்தாரி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் புதிய அதிபராக மம்னுனூன் ஹுசேன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அதிபர் ஜர்தாரி செப்டம்பர் 8ஆம் தேதி பதவியை விட்டு விலக உள்ளார். இதை முன்னிட்டு தமக்கு கடந்த 5 ஆண்டுகளாக ஒத்துழைப்பும் ஆதரவும் அளித்த ராஜதந்திரிகளுக்கு ஜர்தாரி விருந்தளித்தார். இந்த விருந்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், நாடாளுமன்ற அவைத் தலைவர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்களிடையே ஜர்தாரி பேசியது:

இந்தியா, பாகிஸ்தான் இடையிலான உறவுகளை மேம்படுத்த, இரு நாடுகளுக்கும் இடையே நின்றுபோன பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்குவதுதான் வழியாகும். நிலுவையில் உள்ள பல்வேறு பிரச்னைகளைத் தீர்ப்பதன் மூலம், இந்தியாவுடனான இரு தரப்பு உறவுகளை நட்பு மற்றும் ஒத்துழைப்பு ரீதியிலான தோழமையாக மாற்ற பாகிஸ்தான் விரும்புகிறது. எனினும், எல்லைப் பகுதியில் சமீபத்தில் நிகழ்ந்த சம்பவங்களால் அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகள் பாதிக்கப்படாமல் இருப்பதை இரு தரப்பும் உறுதிப்படுத்த வேண்டும்.

இந்தியாவுடன் அமைதியான உறவுகளைக் கொண்டிருக்க பிரதமர் நவாஸ் ஷெரீப் உறுதிபூண்டுள்ளார். தமது அரசு தொடர்ந்து கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளும் என்று அவர் தெரிவித்துள்ளார். அண்டை நாடுகளுடன் அமைதியை ஏற்படுத்தினால்தான் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பின் பலன்களைப் பெற முடியும். ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாட்டுப் படைகள் வெளியேற உள்ள நிலையில், அந்நாட்டில் மேற்கொள்ளப்படும் ஆட்சி மாற்ற நடவடிக்கைகளை பாகிஸ்தான் ஆதரிக்கும். ஆப்கனில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு நம்மாலான அனைத்து ஆதரவையும் அளிப்போம்.

பாகிஸ்தானில் ஜனநாயகம் தழைத்தோங்கி வருகிறது. இங்கு முதன் முறையாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரிடம் இருந்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றொரு அதிபர் பதவிப் பொறுப்புகளைப் பெற்றுக் கொள்ளவிருக்கிறார் என்றார் ஜர்தாரி

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago