முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுமக்கள் தாகத்தை தீர்க்க ஜெயலலிதா வேண்டுகோள்

திங்கட்கிழமை, 9 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.10 - சுட்டெரிக்கும் கத்திரி வெயிலால் பாதிக்கப்பட்டுள்ள, பொதுமக்களின் தாகத்தை தணித்து கோடை வெப்பம் தணியும்வரை நீர்மோர் பந்தல் அமைத்து உதவிட வேண்டும் என அ.தி.மு.க.வினருக்கு கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தன்னலம் கருதாமல் பொது நலப் பணிகளை மேற்கொள்வதிலும், மக்களுக்கு தொண்டாற்றுவதிலும் முன்னிலை வகிக்கும் மாபெரும் இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். இதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில், அதாவது ஏப்ரல் மாதம் முதல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகள் ஆங்காங்கே குடிnullர் பந்தல்கள், nullநீர் மோர் பந்தல்கள் அமைத்து மக்களின் தாகத்தைத் தணிப்பது வழக்கம்.  இந்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு பொதுத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறையில் இருப்பதால், கழகத்தின் சார்பில் குடிnullநீர் பந்தல்கள் மற்றும் nullர்மோர் பந்தல்கள் அமைக்க இந்திய தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டது. 

இந்தியத் தேர்தல் ஆணையமும் தற்போது இதற்கு இசைவு அளித்துள்ளது. எனவே, சமுதாய பொறுப்புணர்வும், மனிதாபிமானமும் மிக்க என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகள், வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில், ஆங்காங்கே குடிnullநீர் பந்தல்கள், nullர் மோர் பந்தல்கள் அமைத்து, கோடை வெப்பம் தணியும் வரை பொதுமக்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.  

இவ்வாறு ஜெயலலிதா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்