முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி இன்று துவக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2013      விளையாட்டு
Image Unavailable

 

நியூயார்க், ஆக. 26 - அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் இன்று கோலாகல மாக துவங்க இருக்கிறது. இதற்காக பிர மாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓப ன் நியூயார்க் நகரில் இன்று துவங்க இருக்கிறது.  இதற்காக பிரமாண்ட ஏற் பாடுகளை நிர்வாகம் செய்து வருகிறது. 

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்ட த்தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆயத்தமாக உள்ளனர். இதற்காக அவர்கள் தீவிரப் பயிற்சி எடுத்து வருகின்றனர். 

கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் பங்கேற்க இருக்கும் நட்சத்திர வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களது திற னை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர். போட்டிகளைக் கண்டு ரசிக்க ரசிகர் களும் ஆவலாக உள்ளனர். 

ஆடவர் பிரிவில் உலக நம்பர் - 1 வீர ரான நோவக் ஜோகோவிக், ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், சுவிஸ் வீரர் ரோஜ ர் பெடரர், இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே ஆகியோர் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர். 

மகளிர் பிரிவில் உலக நம்பர் - 1 வீராங் கனையான செரீனா வில்லியம்ஸ், 

டென்மார்க் வீராங்கனை கரோலினா வோஸ்னியாக்கி, ரஷ்ய வீராங்கனை நாடியா பெட்ரோவா, சீன வீராங்க னை நாலீ ஆகியோர் உள்பட பலர் ஆயத்தமாக உள்ளனர். 

இந்திய அணி தரப்பில் லியாண்டர் பய ஸ், மகேஷ் பூபதி, ரோகன் பொபண்ணா, சோம்தேவ் வர்மன் மற்றும் சானி யா மிர்சா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். 

கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் வீரராங் கனைகள் பட்டத்திற்காக கடுமையாக போராடுவதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

முக்கிய போட்டியான இதில் சில எதிர் பாராத திருப்பங்களும் ஏற்படும். முன் னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் காலிறுதி நிலையிலேயே அதிர்ச்சி தோல்வி அடையக் கூடும். 

சமீபத்தில் ஏ.டி.பி. சுற்றுப் பயணப் போட்டி சின்சினாட்டி நகரில் நடந்தது. இதில் உலக நம்பர் - 1 வீரரான ஜோ கோவிக் 3-வது சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி அடைந்தது நினைவு கூறத்த க்கது. 

இந்திய முன்னணி வீரர்களில் ஒருவரா  ன ரோகன் பொபண்ணா முன்பு பாகி ஸ்தான் வீரர் அய்சம் உல் ஹக்குடன் இணைந்து இரட்டையர் பிரிவில் வெ ற்றிக் கொடி நாட்டி வந்தார். தற்போ து வேறு ஒரு பார்ட்னருடன் இணைந்து ஆடி வருகிறார். 

இரட்டையர் பிரிவில் இந்திய அணி தரப்பில் பங்கேற்க இருக்கும் லியாண்டர் பயஸ், ரோகன் பொபண்ணா மற் றும் சானியா மிர்சா ஆகியோர் சாதிக்க வாய்ப்பு இருக்கிறது. 

அமெரிக்கா தரப்பில், இரட்டையர் பிரி வில் உலகின் சிறந்த ஜோடியான பாப் பிரையான் மற்றும் மைக் பிரையான் ஜோடி கலந்து கொள்ள இருக்கிறது. இந்த ஜோடி மற்ற வீரர்களுக்கு கடும் சவாலை அளிக்கும் என்று எதிர்பார்க்க ப்படுகிறது. 

மகளிர் ஒற்றையர் பிரிரில் செரீனா வில் லியம்ஸ் பங்கேற்க இருக்கிறார். செரீ னா ஆவேசமாகவும், புத்தி சாதுர்யமா கவும் ஆடும் திறன் கொண்டவர். 

ரஷ்யாவின் கவர்ச்சி நட்சத்திர வீராங்க னையான மரியா ஷரபோவா சமீபத்தி ல் காயம் காரணமாக விலகினார். இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்