முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளஸ் 2 தேர்வு - பெண்களே அதிகம் பேர் தேர்ச்சி

திங்கட்கிழமை, 9 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.10 - பிளஸ் 2 தேர்வில் வழக்கம் போல் பெண்களே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு 20 ஆயிரம் பெண்கள் கூடுதலாக தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த ஆண்டு(2011) மார்ச் மாதம் நடைபெற்ற தேர்வில் மொத்தம் 7 லட்சத்து 81 ஆயிரத்து 395 பேர் பள்ளிகள் மூலமும் தனித்தேர்வர்களாகவும் தேர்வு எழுதினர். இந்த முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் மொத்த தேர்ச்சி விகிதம் 85.9 சதவீதம் ஆகும். இது கடந்த ஆண்டின் தேர்ச்சி விகிதமான 85.2 சதவீதத்தை விட .7 சதவீதம் கூடுதலாகும். 

இந்த ஆண்டில் பள்ளிகள் மூலம் தேர்வு எழுதிய 3,33,084 மாணவர்களில் 2,74,197 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 82.3 சதவீத தேர்ச்சி ஆகும். (கடந்த ஆண்டு 81.9 சதவீதம்).  மாணவிகள் 3,83,459 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 3,41,396 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 89 சதவீத தேர்ச்சி ஆகும். கடந்த ஆண்டு 88 சதவீதம் பேர் அதாவது 3,19,956 மாணவியர் தேர்ச்சி அடைந்தனர். இந்த ஆண்டு அதைவிட 21, 340 பேர் கூடுதலாக தேர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றவர்கள் பட்டியல் அனைத்து பாடங்களிலுமே அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு(2010) விவரம் அடைப்புக்குறிக்குள் உள்ளது.

இயற்பியல்-646(231), வேதியியல்-1,243(741), உயிரியல்-615(258), தாவரவியல்-14(4), கணிதம்-2,720(1,762), கம்ப்யூட்டர் சயின்ஸ்-223(265), வணிகவியல்-1,167(968), கணக்கியல்-1,320(851), வணிக கணக்கியல்-358(341).

கணக்கு பாடத்தில் மட்டும் இந்த ஆண்டில் 958 பேர் கூடுதலாக 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் கடந்த ஆண்டு விலங்கியலில் ஒருவர் 200க்கு 200 மதிப்பெண் பெற்றார். இந்த ஆண்டில் ஒருவர் கூட இல்லை. அதே போல் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் இந்த ஆண்டு, கடந்த ஆண்டைக்காட்டிலும் 42 பேர் குறைவாகவே 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

சில முக்கிய பாடங்களில் பாடவாரியாக மாநில ரேங்கிங் பெற்றவர்கள் விவரம் வருமாறு:

தமிழ்-கோகுலகிருஷ்ணன்-198, மாதேஸ்வரன்-198, தினகரன்-198. இந்த மூவருமே விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியிலுள்ள ஏ.கே.டி. அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலம்-கே.ரேகா-195, பி.எஸ்.ரேகா-195(இவர்கள் இருவரும் ஓசூரில்உள்ள ஸ்ரீவிஜய் வித்யா மெட்ரிக் பள்ளி மாணவிகள்), அக்ஷயா-195(டி.ஏ.வி.பள்ளி, சூளைமேடு, சென்னை).

இயற்பியல்-கே.ரேகா-200(ஸ்ரீவிஜய் வித்யாலயா, ஓசூர்), எஸ்.மகாலட்சுமி-200(எச்.எப்.சி. கீழ்க்கட்டளை), ஸ்ருதிகணேஷ்-200(டி.ஏ.வி. கோபாலபுரம், சென்னை).

வேதியியல்-கே.ரேகா-200(ஸ்ரீவிஜய் வித்யாலயா, ஓசூர்), எஸ்.மகாலட்சுமி-200(எச்.எப்.சி.கீழ்க்கட்டளை), சுருதிகணேஷ்-200(டி.ஏ.வி.கோபாலபுரம், சென்னை).

உயிரியல்-கே.ரேகா-200(ஸ்ரீவிஜய் வித்யாலயா, ஓசூர்), ஸ்ருதி கணேஷ்-200(டி.ஏ.வி. கோபாலபுரம், சென்னை), தாக்ஷினி-200(கிரீன்பார்க் மெட்ரிக், நாமக்கல்).

தாவரவியல்-ஆனுல்மர்லியா-200(ரஹமத் பள்ளி, முத்துப்பேட், திருவாருர்), இர்பானா(செயின்ட் மேரி கொரேட்டி, தக்கலை), மாலதி-200(எஸ்.எச்.என்.ஈதேல் ஹார்வே பள்ளி, சாத்தூர்).

விலங்கியல்-சிவகாமி-199(செயின்ட் ஜான்ஸ், வீரவநல்லூர், சேரன்மாதேவி), சங்கீதா-199(சகாயராணி பள்ளி, சிவகங்கை), சண்முகபிரியா-199(சர்க்கார்சாமகுளம், கோவை).

கம்ப்யூட்டர் சயின்ஸ்-மகாலட்சுமி-200(எச்.எப்.சி.பள்ளி, கீழ்க்கட்டளை), அர்ச்சனா-200(அவிலா கான்வென்ட், வேலாண்டிபாளையம், கோவை), திவ்யா-200(ஆர்.எஸ்.கே.பள்ளி, திருச்சி).

கணிதம்-கே.ரேகா-200(ஸ்ரீவிஜய் வித்யாலயா, ஓசூர்), எஸ்.மகாலட்சுமி-200(எச்.எப்.சி.பள்ளி, கீழ்க்கட்டளை), ஸ்ருதிகணேஷ்-200(டி.ஏ.வி.கோபாலபுரம், சென்னை).

வணிகவியல்-ஆர்.ஈஸ்வர்-200(ஸ்ரீஅகோபில மடம், சென்னை), கே.அக்ஷயா-200(சின்மயா வித்யாலயா), பி.ஆர்.ஜனனி-200(ஸ்ரீஅகோபில மடம், சென்னை), நித்யா பினோய் ஜோசப்-200(அண்ணா ஆதர்ஷ், சென்னை).

கணக்கியல்-ஆர்.ஈஸ்வர்-200(ஸ்ரீஅகோபில மடம், சென்னை), கே.அக்ஷயா-200(சின்மயா வித்யாலயா), பி.ஆர்.ஜனனி-200(ஸ்ரீஅகோபில மடம், சென்னை), நித்யா பினோய் ஜோசப்-200(அண்ணா ஆதர்ஷ், சென்னை).

வணிக கணக்கியல்-ஆர்.ஈஸ்வர்-200(ஸ்ரீஅகோபில மடம், சென்னை), கே.அக்ஷயா-200(சின்மயா வித்யாலயா), பி.ஆர்.ஜனனி-200(ஸ்ரீஅகோபில மடம், சென்னை), நித்யா பினோய் ஜோசப்-200(அண்ணா ஆதர்ஷ், சென்னை).

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago