முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை கடற்படையினரால் 35 மீனவர்கள் கைது

திங்கட்கிழமை, 26 ஆகஸ்ட் 2013      தமிழகம்
Image Unavailable

ராமேசுவரம்,ஆக.27 - பாம்பன் பகுதியில் இருந்து நேற்று மீன்பிடிக்க சென்ற மீனவர்களை 4படகு உள்பட 35 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.பாம்பன் மற்றம் ராமேசுவரம் பகுதிகள் பெறும் பதற்றமான சூழ்நிலையில் உள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் நேற்றுக்கு முன் தினம் 300க்கு மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற பாம்பன் பகுதியை சேர்நத அருளானந்தம்,பத்திநாதன்,மெல்வின்,மற்றும் தங்கச்சிமடம் ராஜ் ஆகியோர்கள் படகுகளில் சென்ற குலம்பஸ்,இன்னாசி,ராயப்பு,பத்திநாதன்,பழனி,மைக்கல், ஜோதி,அருளானந்தம்,ராஜா,எடிசன்,ராஜிவ்காந்தி,யோசன் உள்பட35 மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருக்கும்போது அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த இலங்கை கடற்படையினர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி வந்து 4படகு உள்பட 35 மீனவர்களை விரட்டி பிடித்தனர்.நீண்ட நேரம் நடுக்கடலில் வைத்து மீனவர்களை விசாரணை செய்து  இலங்கை கள்பட்டி காவல்நிலையத்தில்; ஒப்படைத்து சென்றனர்.மீனவர்கள் மீது எல்லைதாண்டி வந்ததாக வழக்கு பதிந்து போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.மீனவர்களை இன்று நீதிமன்றத்தில் ஒப்படைக்களாம் என எதிர்பார்க்கபடுகிறார்கள். இலங்கை கடற்படையினர் கைது செய்து கொண்டு சென்ற மீனவர்களின் தகவல் அறிந்த குடும்பங்கள் பெறும் அதிர்ச்சியாடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்