முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியா விவகாரம்: அமெரிக்காவுக்கு, ரஷியா எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 27 ஆகஸ்ட் 2013      உலகம்
Image Unavailable

மாஸ்கோ, ஆக.28  - சிரியா அரசுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை மேற்கொண்டால், மிகவும் ஆபத்தான விளைவுகள் ஏற்படும் என்று அமெரிக்காவுக்கு, ரஷியா எச்சரிக்கை விடுத்துள்ளது. சிரியாவில் உள்நாட்டுப்போர் தீவிரமடைந்துள்ளது. சமீபத்தில் நிகழ்ந்த ரசாயன ஆயுத தாக்குதலில் ஏராளமானோர் பலியான சம்பவம் உலகளாவிய கண்டனத்துக்குள்ளானது.

இந்நிலையில் சிரியா அரசுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள அமெரிக்கா ஆலோசித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோ அமெரிக்க வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஜான் கெர்ரியை

தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, சிரியாவில் போராட்டக்காரர்களுக்கு எதிராக அரசு ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டி அந்நாட்டு விவகராத்தில் தலையிட அமெரிக்கா தயாராகி வருவதாக அதிகாரிகள் தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

   அப்படிப்பட்ட முயற்சிகள் எதையும் மேற்கொள்ள வேண்டாம் என்றுஅமெரிக்காவுக்கு கடுமையான  எச்சரிக்கையை அவர் விடுத்தார். சிரியாவில் நேரிடக் கூடிய புதிய ராணுவத் தலையீடானது மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும், வடஆப்பிரிக்க மண்டலத்திலும்,  மிகவும் ஆபத்கான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று எச்சரித்தார்.   

சிரியா அரசுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையை தொடங்க வேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள சில சக்திகளின் விருப்பமானது ஐ.நா. சபைக்கு வெளியே ஒரு அமைதி மாநாட்டை நடத்த அமெரிக்காவும், ரஷியாவும் இணைந்து மேற்கொண்டு வரும் முயற்சியை வலுவிழக்கச் செய்துவிடும். சிரியா அரசுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையை தொடங்க வேண்டும் என்போரின் நெருக்கடிக்கு பணிந்து கோபமூட்டும், நடவடிக்கைகளில் இறங்க வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்