முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஓபன்: நடால் - செரீனா வில்லியம்ஸ் முன்னேற்றம்

செவ்வாய்க்கிழமை, 27 ஆகஸ்ட் 2013      விளையாட்டு
Image Unavailable

 

நியூயார்க், ஆக. 28 -  அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி யின் முதல் சுற்றில் முன்னணி வீரரான ரபேல் நடால் மற்றும் செரீனா வில்லி  யம்ஸ் ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினர் .  இந்த வருடத்தின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் முக்கிய நகரமான நியூயார்க்கில் கடந்த சில நாட்களாக வெ

கு விமர்சையாக நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத்

தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள்மற்றும் வீராங்கனைகள் களம் இறங்கி உள்ளனர். இது தற்போது விறுவிறுப் பாக சென்று கொண்டு இருக்கிறது. கிராண்ட் ஸ்லாம் போட்டியான  இதில் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர். 

ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதில் உலக முன்னாள் நம்பர் - 1 வீரரான ரபேல் நடாலும், அமெரிக்க வீரரும் மோதினர். 3 செட் வரை நீடித்த இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் வீரரும் 2-ம் நிலை வீரருமா

ன நடால் 6- 2, 6-3,6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்க இளம் வீரரான ஹாரிசை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்

னேறினார். 

மற்றொரு ஆட்டம் ஒன்றில் ஸ்பெயினின் முன்னணி வீரர்களில் ஒருவரான டேவிட் பெர்ரரும், ஆஸ்திரேலிய வீரரும் மோதினர். இதில் அனுபவம் மிக்க வீரரான பெர்ரர் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றார். அவர் 7-5, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ஆஸி. வீரர் கெய்ஜிசை தோற்கடித்தார். மற்ற ஆட்டங்களில் கனடா வீரர் டான்சிலிக், ஸ்பெயின் வீரர்கள் ராபர்டு, பா

ஸ்டிகா மற்றும் இஸ்ரேல் வீரர் செலா ஆகியோர் வெற்றி பெற்றனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க நட்சத்திர வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் மற்றும் இத்தாலி வீராங்க

னையும் மோதினர். இந்த ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான செரீனா அபாரமாக ஆடி, 6-0, 6-1 என்ற நேர் செட் கணக்கில் இத்தாலி வீராங்கனை செஷியோவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 

மற்றொரு ஆட்டம் ஒன்றில் ஜெர்மனியின் ஹெர்பர் வெற்றி பெற்றார். அவர் 6-1, 6-1 என்ற செட் கணக்கில் செக். குடியரசின் ஹர்டெக்காவை வீழ்த்தினார். அமெரிக்காவின் முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான வீனஸ் வில்லிய

ம்ஸ் பெல்ஜியம் வீராங்கனையுடன் மோதினார். இதில் அவர் 6-1, 6-2 என்ற செட் கணக்கில் பிலிப்கென்சை தோ

ற்கடித்தார். இதே போல முதல் சுற்றில் போலந்து வீராங்கனை ரட்வன்ஸ்கா, சீன வீராங்கனை நாலீ, செர்பிய வீராங்கனை ஜான்கோவிக் மற்றும் ரஷ்ய வீராங்கனை மகரரேயா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago