முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய கோப்பை குத்துச்சண்டை - மேரி கோம் தங்கம் வென்றார்

திங்கட்கிழமை, 9 மே 2011      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, மே 10 - சீனாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மேரி கோம் தங்கப் பதக்கம் வென்றார். ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் மேரி கோம், சீனாவில் நடைபெற்ற மகளிருக்கான குத்துச் சண்டை போட்டியில் கலந்துகொண்டார். 48 கிலோ எடைப் பிரிவில் கலந்துகொண்ட மேரி கோம் தான் கலந்துகொண்ட பிரிவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றார். கடந்த 2010 ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றவர் மேரி கோம். ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு பிறகு இவர் கலந்துகொள்ளும் முதல் போட்டி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. 

சீனாவின்  ஹைய்கோ நகரில் ஆசிய பெண்கள் குத்துச் சண்டை போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 48 கிலோ எடைப் பிரிவில் அரை இறுதி போட்டியில் பிலிப்பைன்ஸ் நாட்டின் கதே அப்பாரியை வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார் இந்திய வீராங்கனை மேரிகோம். இதையடுத்து மற்றொரு அரை இறுதி போட்டியில் வெற்றிபெற்ற நடப்பு ஆசிய சாம்பியனான வட கொரியாவின் கிம் மைங் சிம்மை, 5 முறை உலக சாம்பியனான மேரிகோம்  எதிர்கொண்டார். இரண்டு வீராங்கனைகளும் தங்கப் பதக்கத்தை வெல்ல கடுமையாக போராடினர்.  இறுதியில் மேரிகோம் தனது முழுத் திறமையையும் காட்டி போட்டியில் 4 - 3 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் இந்தியாவுக்கு 48 கிலோ எடைப் பிரிவில் தங்கப்பதக்கம் கிடைத்தது. இந்த வெற்றியின் மூலம் இந்த ஆண்டில் தனது முதலாவது பதக்க வேட்டையை துவக்கியுள்ளார் மேரி கோம்.

இந்த தகவலை இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்