முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுமி மலாலாவுக்கு அமைதிக்கான சர்வதேச விருது

புதன்கிழமை, 28 ஆகஸ்ட் 2013      உலகம்
Image Unavailable

 

லண்டன், ஆக.29 - பாகிஸ்தானில் தலிபான்களால் சுடப்பட்ட பாகிஸ்தான் சிறுமி மலாலாவுக்கு, அமைதிக்கான சர்வதேச விருது வழங்கப்படுகிறது. பாகிஸ்தானை சேர்ந்தவர் சிறுமி மலாலா. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பள்ளிக்குச் சென்ற இவர் தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த இவர் லண்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக எலிசபெத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  அங்கு  அவருக்கு தலையில் 3 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதை அடுத்து அவர் உயிர் பிழைத்தார். 

இங்கிலாந்தில் சிகிச்சைபெற்ற இவரை, பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதையடுத்து மலாலாவுக்கு உலகம் முழுவதும் ஆதரவு பெருகியது. அவரது குடும்பத்தினர் லண்டனில் தங்கி இருக்க சர்தாரி ஏற்பாடு செய்தார். பாகிஸ்தான் தூதரகப் பள்ளியிலேயே படிக்க மாலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அவரது தந்தைக்கும் அங்கு பணி வழங்கப்பட்டது. 

   மலாலாவின் பெயர் இந்த ஆண்டு நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில் மலாலாவுக்கு நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் நகரில் இயங்கி வரும் கிட்ஸ் ரைட்ஸ் என்ற நிறுவனம் குழந்தைகளுக்கான அமைதி விருதை வழங்கி கவுரவிக்கிறது. இந்த விருது 1 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர் மற்றும் சான்றிதழ்

கொண்டதாகும். தெற்கு ஹாலந்தின் ஹாக் நகரில் செப்டம்பர் மாதம் நடைபெறும் விழாவில் ஏமன் நாட்டு பெண்ணுரிமைப் போராளியும், நோபல் பரிசு பெற்றவருமான தவக்கல் கர்மன், சர்வதேச குழந்தைகளுக்கான அமைதி விருதை மலாலாவுக்கு வழங்குவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்