முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பைல்கள் காணாமல் போனது உண்மைதான்: அரசு

புதன்கிழமை, 28 ஆகஸ்ட் 2013      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஆக.29 - நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பான சில பைல்கள் காணாமல் போனது உண்மைதான் என்று சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. கடந்த 2005-ம் ஆண்டில் இருந்து 2009-ம் ஆண்டு வரை மத்திய நிலக்கரி சுரங்க இலாகா பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இருந்தது. அப்போது நிலக்கரி சுரங்கங்கள் உரிமம் வழங்கப்பட்டதில் ரூ. ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி வரை ஊழல் நடந்துள்ளது என்று மத்திய கணக்கு தணிக்கை ஆணையம் தெரிவித்துள்ளது. இதனையொட்டி பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இது குறித்து சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்தநிலையில் நிலக்கரி சுரங்கங்கள் ஏலம் விடப்பட்டது தொடர்பாக பல பைல்களை காணவில்லை என்று நிலக்கரி சுரங்க இலாகா அறிவித்துள்ளது. இதற்கும் பிரதமர் மன்மோகன் சிங்குதான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. நிலக்கரி சுரங்க ஊழலை மறைக்க பைல்களை காணாமல்போக செய்திருக்கலாம் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன. 

இந்தநிலையில் பைல்கள் காணாமல் போனது குறித்து சுப்ரீம்கோர்ட்டில் பிரமாண பத்திரத்தை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. அதில் நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பான சில பைல்களை காணவில்லை. அ வைகளை தேடிப்பிடிக்க முடியவில்லை. இருந்தபோதிலும் காணாமல் போன பைல்களை தேடிப்பிடிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அந்த பிரமாண பத்திரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நிலக்கரி சுரங்க உரிமம்கோரி தனியார் கம்பெனிகள் விண்ணப்பித்த விண்ணப்பங்களில் 173 ஐ காணவில்லை. இவைகளில் 157 விண்ணப்பங்கள் கடந்த 2004-ம் ஆண்டுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டவைகளாகும். அந்த விண்ணப்பதாரர்களுக்கு நிலக்கரி சுரங்க உரிமம் வழங்கப்படவில்லை என்று மத்திய நிலக்கரி சுரங்க அமைச்சகம் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் நிலக்கரி சுரங்க உரிமம் வழங்கப்பட்டது தொடர்பாக 47 பைல்களை சி.பி.ஐ. கோரியுள்ளது. இதில் 7 பைல்களை காணவில்லை. விசாரணையை முடிக்க சி.பி.ஐ. கேட்கும் 9 பைல்களை தேடிப்பிடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அந்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. பைல்கள் காணாததாலும் சி.பி.ஐ. விசாரணைக்கு அந்த பைல்களை கொடுக்க முடியாததாலும் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. மத்திய அரசு சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பிரமாண பத்திரத்தை நீதிபதி லோதா தலைமையிலான சிறப்பு பெஞ்ச் இன்று ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் என்று தெரிகிறது. காணாமல் போன பைல்களை தேடிப்பிடிப்பதற்காக நிலக்கரி சுரங்க கூடுதல் செயலாளர் தலைமையில் அமைச்சகங்களுக்கான கமிட்டி ஒன்றை மத்திய அரசு நியமித்துள்ளது. இதற்கிடையில் நிலக்கரி சுரங்க அதிகாரிகள் சிலர் மீது வழக்கு தொடர்வதில் மத்திய அரசுக்கும் சி.பி.ஐ.க்கும் மோதல் போக்கு உருவாகி உள்ளது. நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு விசாரணை சுப்ரீம்கோர்ட்டு மேற்பார்வையில் நடந்து வருவதால் ஊழலில் தொடர்புள்ள அதிகாரிகள் மீது வழக்கு தொடர முன்அனுமதி பெறத்தேவையில்லை என்று சி.பி.ஐ. கூறி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago