முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொருளாதார சிக்கல்: ஜனாதிபதி மீது சிதம்பரம் குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 29 ஆகஸ்ட் 2013      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, ஆக. 29 - ரூபாய் மதிப்பு, பொருளாதார தடுமாற்றம், பங்குச் சந்தை சரிவு போன்றவற்று முன்னாள் நிதி அமைச்சரான தற்போதைய ஜனதாதிபதி பிரணாப் முகர்ஜியே காரணம் என்று நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். 

ரூபாய் மதிப்பு சரிவு, பொருளாதார தடுமாற்றம் போன்றவற்றுக்கு பொதுவாக சர்வதேச பொருளாதார சூழ்நிலையை காரணமாக சொல்வார் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம். ஆனால் அண்மைக்காலமாக உள்நாட்டு நடவடிக்கைகளும்கூட இந்த சிக்கல்களுக்குக் காரணம் என்று பேசி வருகிறார் ப. சிதம்பரம். 

ராஜ்யசபாவில் நேற்று முன்தினம் ரூபாய் மதிப்பு சரிவு தொடர்பாக பேசிய ப.சிதம்பரம், 2009-11 ம் ஆண்டு காலத்தில் நடப்பு கணக்கு பற்றாக்குறையை கையாண்ட விதத்தில் குறைபாடு இருப்பதாக சுட்டிக்காட்டினார். அதாவது அப்போது நிதி அமைச்சராக இருந்தவர் பிரணாப் முகர்ஜி. அவர்காலத்தில் மேற்கொண்ட நடைமுறைகளும் தற்போதைய பொருளாதார சிக்கலுக்குக் காரணம் என்று குற்றம்சாட்டினார் சிதம்பரம். அத்துடன் இல்லாமல் தாம் பொறுப்பேற்ற பின்னர் மேற்கொண்ட நடவடிக்கைகள் அதன் விளைவுகளையும் பட்டியலிட்டுப் பேசினார் சிதம்பரம். நேற்று முன்தினம் மட்டுமின்றி கடந்த சில நாட்களுக்கு முன்பும் கூட செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ப. சிதம்பரம், பிரணாப் முகர்ஜி பொறுப்பு வகித்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்