முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இனி புதிய மாநிலங்கள் உருவாக்கும் திட்டமில்லை: அரசு

வியாழக்கிழமை, 29 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஆக. 29 - தெலுங்கானாவுக்குப் பிறகு புதிய மாநிலங்கள் எதையும் உருவாக்கும் திட்டமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆந்திராவை இரண்டாக பிரித்து தனித்தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தை நான்காக பிரிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குரல் எழுப்பினார். தொடர்ந்து நீண்ட காலப் போராட்டமான போடேலாந்து, கூர்காலாந்து, விதர்பா போன்ற தனிமாநில கோரிக்கைகள் புதிய வீரியம் பெற்றுள்ளன. தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று கூட ஆரம்பித்துவிட்டனர் சிலர். அசாம் போன்ற மாநிலங்களிலும் புதிய மாநிலங்களை உருவாக்கி தர வேண்டும் என போராட்டங்கள் தலை தூக்கி வருகின்றன. இந்நிலையில், மத்திய அரசுக்கு வேறு ஏதாவது புதிய மாநிலத்தை உருவாக்கும் எண்ணம் உள்ளதா? என ஒரு எம்.பி. பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கேள்விக்கு நேற்று எழுத்து மூலமாக பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங், ாதற்போதைய நிலவரப்படி, வேறு எந்த தனிமாநிலத்தையும் உருவாக்குவது தொடர்பான திட்டம் ஏதும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லைா என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்