முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழர் பகுதிகளில் ஐ.நா. ஆணையர் நவநீதம் பிள்ளை ஆய்வு

வியாழக்கிழமை, 29 ஆகஸ்ட் 2013      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, ஆக. 29 ​- இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே சண்டை நடந்தது. இந்த சண்டையின் போது ராணுவம் கொத்துகுண்டுகளை வீசி அப்பாவி தமிழர்கள் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரை கொன்று மறைத்தது. மேலும் தமிழர்கள் பகுதிகளில் சிங்களர்களை குடியமர்த்தியது உள்ளிட்ட பல அராஜகங்களை செய்து இலங்கை ராணுவம் போர் குற்றம் புரிந்தது.

மனித உரிமை மீறல் மற்றும் போர் குற்றம் புரிந்த இலங்கை மீது விசாரணை நடத்த வேண்டி உலக நாடுகள் வலியுறுத்தின. இதனடிப்படையில்  உண்மை கண்டறியும் பொருட்டு ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு வந்தடைந்தார். அவரை அங்குள்ள ஐ.நா. அதிகாரிகள் வரவேற்றனர். 

நவம்பர் மாதம் கொழும்புவில் நடைபெறவுள்ள காமன்வெல்த் உச்சி மாநாட்டை கனடா புறக்கணிக்கப்போவதாக அறிவித்தது. இதனையடுத்து நெருக்கடிக்கு ஆளான இலங்கை நவநீதம் பிள்ளையின் வருகைக்கு பொது எதிர்ப்பை காட்டியது. இருந்தும் அவர் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட அனுமதியளித்தது. 

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த தமிழரான ஆணையர் நவநீதம் பிள்ளை இலங்கை அதிபர் மஹிந்தா ராஜபக்சாவை சந்தித்து பேசுவார். போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணப்பகுதிகளை பார்வையிடுவார். அவர் அங்குள்ள அரசியல் வாதிகள், மனித உரிமை அமைப்பினர், மூத்த நீதிபதிகள், தேசிய மனித உரிமை ஆணைய அதிகாரிகள், தேசிய நடவடிக்கை குழுவினரையும் அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார். 

இதுகுறித்த முதல் கட்ட தகவல் மதிப்பீடுகளை செம்படம்பர் மாதம் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நவநீதம் பிள்ளை சமர்பிப்பார். மேலும் இப்பிரச்சினை குறித்த முழு அறிக்கையையும் வரும் 2014-ம் ஆண்டு  மார்ச் மாதம் இச்சபையில் வெளியிடுவார். இலங்கைக்கு எதிரான இரண்டு தீர்மானங்களை ஐ.நா. மனித உரிமை ஆணையம் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து ஐ.நா. அதிகாரிகளின் இந்த சுற்றுப்பயணம் தொடங்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்