முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாயமான கோப்புகள்: எப்.ஐ.ஆர். பதிவு செய்யாதது ஏன்?

வியாழக்கிழமை, 29 ஆகஸ்ட் 2013      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, ஆக. 30 - நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான கோப்புகள் மாயமானது தொடர்பாக காவல்துறை மூலம் முதல் தகவல் அறிக்கை ஏன் பதிவு செய்யப்படவில்லை என்று மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டின் நேரடி கண்காணிப்பின் கீழ் சி.பி.ஐ. யால் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் சி.பி.ஐ. கோரும் ஆவணங்களை மத்திய அரசு தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆனால் சி.பி.ஐ. கோரிய ஆவணங்கள் பலவும் காணாமல் போய்விட்டது என்று கைவிரித்தது மத்திய அரசு. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மத்திய அரசு ஆவணங்களைக் காணவில்லை என்று கூறியதையும் சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தெரிவித்தது. 

இதைத் தொடர்ந்து மத்திய அரசு ஒரு சிறு விளக்க அறிக்கையைத் தாக்கல் செய்தது. இந்நிலையில் நிலக்கரி கோப்புகள் மாயமானது தொடர்பான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நடைபெற்றது. அப்போது கோப்புகள் மாயமானது குறித்து காவல்துறை மூலம் ஏன் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யவில்லை என்று மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அத்துடன் சி.பி.ஐ. விசாரணை மெதுவாக நடைபெறுவதற்கும் சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தது. மேலும் முறைகேட்டில் ்ஈடுபட்டதாக கருதப்படும் 169 நிறுவனங்களுக்கு எதிரான வழக்கு விசாரணையை விரைந்து முடிக்குமாறும் சி.பி.ஐ. க்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்