முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநிலத்திலேயே 3ம் இடத்தை பிடித்த மாணவி சிந்துகவி பேட்டி

திங்கட்கிழமை, 9 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

நாமக்கல்,மே.10 -  மருத்துவராகி ஏழைகளுக்கு சேவை செய்யப் போவதாக பிளஸ் 2 தேர்வில் மாநிலத்திலேயே மூன்றாமிடத்தை பிடித்த மாணவி சிந்துகவி தெரிவித்தார். தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் நாமக்கல்லை சேர்ந்த பள்ளி மாணவி சிந்துகவி மாநில அளவில் 1186 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும், மாவட்ட அளவில் முதலிடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார். மேலும் இவர் நான்கு பாடங்களில் 200 க்கு 200 மதிப்பெண்கள் பெற்றும் சாதனை படைத்துள்ளார். நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ளது காவேட்டிபட்டி குறிஞ்சிபட்டி மேல்நிலைப் பள்ளி. இந்த பள்ளியில் பயின்ற  மாணவி சிந்துகவி இந்த மகத்தான சாதனையை படைத்துள்ளார். இவர் பெற்ற மதிப்பெண்கள் வருமாறு:

தமிழ் - 196 மதிப்பெண்

ஆங்கிலம் - 190 

கணிதம் - 200

இயற்பியல் - 200

வேதியியல் -  200

உயிரியல் - 200

மாணவி சிந்துகவியின் தந்தை பஞ்சலிங்கம். தாய் லோகநாயகி. இவர்களுக்கு சிந்துகவி ஒரே மகள். தற்போது ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் லேப் டெக்னீசியனாக பஞ்சலிங்கம் பணியாற்றி வருகிறார். பிளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் 3 ம் இடத்தையும், மாவட்டத்தில் முதலிடத்தையும் பிடித்த மாணவி சிந்துகவியை பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், ஆசிரியைகள் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். சக மாணவிகள் அனைவரும் இனிப்பு கொடுத்து வாழ்த்தினர். இது குறித்து மாணவி சிந்துகவி கூறுகையில், நான் 10 ம் வகுப்பை உடுமலை ஸ்ரீநிவாச வித்யாலய பள்ளியில் பயின்றேன். அப்போது 10 ம் வகுப்பு தேர்வில் 475 மார்க் பெற்றேன். தற்போது பள்ளி முதல்வர், ஆசிரியர்களின் ஊக்கத்தால் மாநில அளவில் பிளஸ் 2 தேர்வில் மூன்றாமிடத்தை பெற முடிந்தது என்று கூறினார். பள்ளியில் எங்களுடைய திறனை மேம்படுத்த அதிகமான டெஸ்ட் வைத்தார்கள். நிறைய பயிற்சி கொடுத்தனர். இதனால்தான் என்னால் அதிக மதிப்பெண்களை பெற முடிந்தது. பள்ளியில் நிலவிய ஆரோக்கியமான சூழ்நிலையும் இதற்கு ஒரு காரணம் என்று கூறிய சிந்துகவி, என்னை ஊக்குவித்த பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோருக்கு நன்றி கூறுகிறேன் என்றும் தெரிவித்தார். மேலும் எதிர்காலத்தில் ஒரு டாக்டராகி சமூகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்வேன் என்றும் மாணவி சிந்துகவி உணர்ச்சிபூர்வமாக தெரிவித்தார். அப்போது அவரது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்