முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

156 ரன்கள் குவித்து ஆரோன் பிஞ்ச் புதிய உலக சாதனை!

வெள்ளிக்கிழமை, 30 ஆகஸ்ட் 2013      விளையாட்டு
Image Unavailable

 

சவுதம்டன், ஆக. 31 - இங்கிலாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச் 63 பந்துகளில் 156 ரன்கள் அடித்து புதிய உலக சாதனை படைத்திருக்கிறார். ஆஸ்திரேயா- இங்கிலாந்து இடையேயான 20 வது ஓவர் போட்டி தொடரில் முதல் ஆட்டம் சவுதம்டனில் நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டூவர்ட் பிராட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலியா தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் களம் இறங்கினர். வார்னர் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் ஆரோன் பிஞ்ச் அதிரடியைக் காட்டினார். ஒவ்வொரு பந்தையும் ரன்களாக மாற்றினார் ஆரோன் பிஞ்ச், அவரது ஆட்டத்தில் சிக்சர்களும் பவுண்டரிகளுமாக பந்துகள் பறந்தன. 26 பந்தில் 50 ரன்னை தொட்ட ஆரோன் பிஞ்ச், 9-வது ஓவரில் ஹாட்ரிக் சிக்சர் அடித்து அசத்தினார். 13 வது ஓவரில் பிஞ்ச் சிக்சர் அடித்து சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 47 பந்தில் 100 ரன்களை எட்டினார். இதில் 8 சிக்சர், 9 பவுண்டரிகள் அடங்கும். இது 20 ஓவர் கிரிக்கெட்டில் 2-வது அதிவேக சதமாகும். ஆனால் பிஞ்சின் வெறியாட்டம் அடங்கவில்லை. 60 பந்தில் 150 ரன்னை தொட்டார். முடிவில் அவர் 63 பந்துகளில் 156 ரன்களை எட்டிய நிலையில் ஆட்டமிழந்தார். இதில் 14 சிக்சர், 11 பவுண்டரிகள் அடங்கும். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு ஆட்டத்தில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையை பிஞ்ச் படைத்திருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்