முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதி மகள் செல்வியின் உறவினர்கள் கைது

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2013      ஊழல்
Image Unavailable

 

சென்னை, செப்.1 - 150 கோடி மதிப்பிலான அறக்கட்டளைச் சொத்தினை முறைகேடு செய்ததாக, தி.மு.க. தலைவர் கருணாநிதி மகள் செல்வியின் உறவினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மைக்காலமாக ஓய்ந்திருந்த நில அபகரிப்பு சிக்கலில் மீண்டும் திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தினர் பெயர் அடிபடத் தொடங்கியிருக்கிறது. சென்னை போலீசில் கொடுக்கப்பட்டிருக்கும் நில அபகரிப்பு புகாரில் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி மற்றும் அவரது குடும்பத்தினர் பெயர்கள் வெளியாகி உள்ளன. 

சென்னை நுங்கம்பாக்கம் காசி கார்டன் குமரப்ப முதலில் தெருவில் 20 கிரவுண்ட் நிலம், அறக்கட்டளை ஒன்றுக்கு சொந்தமானது. 150 கோடி மதிப்பிலான இந்த சொத்து  இது . இந்த அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தில் 16 கிரவுண்ட் நிலம் செல்வியின் மருமகனின் சகோதரி உமா மகேஸ்வரி பெயரில் வாங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலத்தை ரூ8 கோடிக்கு பேசியிருக்கின்றனர். அட்வான்ஸாக ரூ1 கோடியே 72 லட்சம் கொடுத்திருக்கின்றனர். பின்னர் இதில் ரூ1 கோடியே 50 லட்சத்தையும் திரும்பப் பெற்றுக் கொண்டனர். ஆக 16 கிரவுண்ட் நிலத்துக்கு கொடுக்கப்பட்ட தொகை ரூ22 லட்சம்தான். எஞ்சிய தொகையைக் கேட்டதற்கு மிரட்டினர் என்று அறக்கட்டளை நிர்வாகி யதிஸ் குப்தா போலீசில் புகார் கூறியிருக்கிறார். 

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நடந்த இந்த பேரத்தில் எஞ்சிய தொகை தரப்படவில்லை. எந்த ஒரு நடவடிக்கையையும் போலீஸ் மேற்கொள்ளவில்லை. இதனால் தற்போது போலீசில் புகார் கொடுத்திருக்கிறோம் என்கிறார் எதிஸ் குப்தா. இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் ,150 கோடி மதிப்பிலான அறக்கட்டளைச் சொத்தினை முறைகேடு செய்ததாக, முன்னாள் முதல்வரின் மகள் செல்வியின் உறவினர்கள் உமா மகேஸ்வரி, டாக்டர் சுஜய் ஆனந்த் ரெட்டி ஆகியோரை கைது செய்தனர். நிலப்பறிப்பு வழக்கில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்