முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஓபன்: ஜோகோவிக் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2013      விளையாட்டு
Image Unavailable

 

நியூயார்க், செப். 1 -  அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி யில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் உலக நம்பர் - 1 வீரரான நோவ க் ஜோகோவிக் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.  இந்த வருடத்தின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓப ன் டென்னிஸ் முக்கிய நகரமான நியூயார்க்கில் கடந்த சில நாட்களாக நடை பெற்று வருகிறது.  இதில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்க னைகள் களத்தில் குதித்து உள்ளனர். இது தற்போது காலிறுதியை நோக்கி முன்னேறி வருகிறது. 

கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மகி ழ்வித்து வருகின்றனர். ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் 2-வ து சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதி ல் உலக நம்பர் - 1 வீரரான நோவக் ஜோகோவிக்கும், ஜெர்மனி வீரரும்    மோதினர். 

இதில் செர்பிய வீரரான நோவக் அபார மாக ஆடி, 7 -6, 6 -2, 6 -2 என்ற செட் கணக்கில் பெஞ்சமின் பெக்கரை வீழ்த் தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். 

இங்கிலாந்தின் நட்சத்திர வீரரான ஆன் டி முர்ரேவும், அர்ஜென்டினா வீரரும் மற்றொரு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றி ல் மோதினர். 

இதில் அனுபவமிக்க வீரரரான முர்ரே சிறப்பாக ஆடி, 7 -6, 7 -6, 6 -3 என்ற செ ட் கணக்கில் லியானார்டோவை தோற் கடித்து 3- வது சுற்றுக்கு தகுதி பெற்றார். 

இந்தியாவின் முன்னணி வீரர்களில் ஒரு வரான சோம்தேவ் வர்மனும், இத்தா லி வீரரும் மற்றொரு 2-வது சுற்றில் மோதினர். 

இதில் இத்தாலி வீரர் அன்ட்ரியா 7 -6, 6 -4, 7 -5 என்ற நேர் செட் கணக்கில் இந்தி ய வீரர் வர்மனை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். 

மகளிருக்கான 3-வது சுற்றில் சீன வீரா ங்கனை நாலீ 6 -2, 7 -5 என்ற செட் கண க்கில் இங்கிலாந்து வீராங்கனை ராப்ச னை வென்றார். 

போலந்து வீராங்கனை அக்னீஸ்கா 6-4, 7-6 என்ற செட் கணக்கில் ரஷ்ய வீராங் கனை சென்கோவாவை வென்றார். 

ஆண்களுக்கான இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீரர் ரோகன் பொபண்ணா பிரான்ஸ் வீரர் ரோஜர் வெசலின் ஜோடி 6-2, 6-4 என்ற கணக்கில் அமெரிக்காவின் பிராட்லி ஹாலன் மற்றும் சேம்குரே இணையை வென்றது. 

கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றி ல் இந்திய வீரர் ரோகன் பொபண்ணா ஜூலியா ஜார்ஜஸ் (ஜெர்மனி) ஜோடி 7-6, 2-6, 6-10 என்ற கணக்கில் மெக்சி கோவின் சண்டிகோ கோன்லஸ் மற் றும் ஸ்பியர்ஸ் ஜோடியிடம் வீழ்ந்தது. 

இந்தியாவின் சானியா மிர்சா ருமேனி யாவின் கொரியா டுகு ஜோடி 6-4, 6-7, 4-10 என்ற கணக்கில் போராடி அமெரி க்காவின் லூபர்ட் மற்றும் மார்சலோ (பிரேசில்) இணையிடம் தோல்வியைச் சந்தித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்