முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமையல் கியாஸ் வாங்க நேரடி மானியத் திட்டம் அமல்

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, செப். 1 ​- இந்திய எண்ணை நிறுவனங்கள் மூலம் நாடெங்கும் சமையல் கியாஸ் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சமையல் கியாஸ் உற்பத்தி, வினியோகம் உள்பட எல்லா செலவினங்களையும் கணக்கிட்டால், ஒரு சிலிண்டருக்கு சராசரியாக ரூ. 850 முதல் ரூ. 900 வரை செலவு ஏற்படுகிறது.

சமையல் கியாசை இவ்வளவு அதிக விலை கொடுத்து வாங்க ஏழை- எளிய மக்கள் கஷ்டப்படுவார்கள் என்பதால் மத்திய அரசு மானியம் கொடுத்து பாதி விலையில் வழங்கி வருகிறது. ஆனால் இந்த மானியத்தால் மத்திய அரசுக்கு கடும் நிதி சுமை ஏற்பட்டுள்ளது. மேலும் மானிய பணத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் வீணாவதும், முறைகேடாக பயன்படுத்தப்படுவதும் தெரிய வந்தது.

இதையடுத்து இனி ஆண்டுக்கு ஒரு குடும்பத்துக்கு 9 சிலிண்டர்களே மானிய விலையில் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் அந்த 9 சிலிண்டர்களுக்கு வழங்கப்படும் 435 ரூபாய் மானியத்தை மக்களிடமே நேரடியாக கொடுக்கும் நேரடி மானியத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின்படி 9 சிலிண்டர்களுக்கான மானிய பணம் ஆதார் அட்டை எண் படி ஒவ்வொரு பயனாளியின் வங்கி கணக்குக்கு வந்து விடும். முதல் கட்டமாக 20 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.

20 மாவட்டங்களிலும் நல்ல வெற்றி கிடைத்துள்ளதால் நேரடி மானியத் திட்டத்தை 269 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர். அதன்படி இன்று (செப்டம்பர் 1 ம் தேதி) 33 மாவட்டங்களில் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது.

அக்டோபர் மாதம் 44 மாவட்டங்கள், நவம்பர் மாதம் 46 மாவட்டங்கள், டிசம்பர் மாதம் 40 மாவட்டங்கள், ஜனவரி 1 ம் தேதி 105 மாவட்டங்களில் நேரடி மானியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய மந்திரி ப.சிதம்பரம் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின்படி சமையல் கியாஸ் கோரி பதிவு செய்ததும், அவர்களது வங்கி கணக்கில் மத்திய அரசின் மானிய பணம் ரூ. 435 வந்து விடும். 9 சிலிண்டர்களுக்கு மட்டுமே இப்படி அரசின் மானியம் கிடைக்கும். அதற்கு மேல் சமையல் கியாஸ் பெற விரும்புபவர்கள் சந்தை விலையில் அதாவது ரூ. 850-க்கு மேல் கொடுத்துதான் சிலிண்டர் பெற முடியும். மத்திய அரசின் இந்த கட்டுப்பாடு காரணமாக மானியச் செலவில் ரூ. 9 ஆயிரம் கோடி மத்திய அரசுக்கு மிச்சம் ஆகும். அதோடு தேவையற்ற நிர்வாக செலவுகளையும் கணிசமாக குறைக்க முடியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago