முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நள்ளிரவு முதல் பெட்ரோல் - டீசல் விலை உயர்வு

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,செப்.1 - பெட்ரோல், டீசல், விலை மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.2.35-ம் ஒரு லிட்டர் டீசலுக்கு 50 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்தது.  சமையல் கியாஸ், மண்ணெண்ணெய் விலையையும் மத்திய அரசு உயர்த்துகிறது. . 

நாட்டிற்கு தேவையான பெட்ரோலிய பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் விலைக்கு ஏற்பவும் இறக்குமதி செலவையும் சேர்த்து உள்நாட்டில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. சர்வதேசந்தையில் கச்சாஎண்ணெய் விலைக்கு தகுந்தவாறு முதலில் விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்தது. விலை கூடிக்கொண்டே போவதால் உள்நாட்டிலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்தி மத்திய அரசு நிர்ணயம் செய்து வந்தது. விலையை அடிக்கடி உயர்த்தியதால் மத்திய அரசு மீது மக்களுக்கு வெறுப்பு அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசானது பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை எண்ணெய் நிறுவனங்களின் முடிவுக்கு விட்டு விட்டது. அதிலிருந்து குறைந்தது மாதம் ஒரு முறையோ அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறையோ பெட்ரோல் பொருட்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் இஷ்டம்போல் உயர்த்தி வருகின்றன. கடந்த 15 நாட்களுக்கு முன்பு பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின. அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு அதிக அளவில் சரிந்துவிட்டதால் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு மேலும் அதிகரித்துள்ளது. அதனால் சமையல் எரிவாயு, டீசல், மண்ணெண்ணெய் விலையே உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முதலில் முடிவு செய்திருந்தாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது பாராளுமன்றம் நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் விலையை உயர்த்தினால் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபடுவார்கள். பல முக்கிய மசோதாக்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாமல் போய்விடும்.  நடப்பு பாராளுமன்ற கூட்டம் முடிந்த பின்னர் விலை உயர்த்தப்படலாம் என்று முதலில் கூறப்பட்டது.  நடப்பு பாராளுமன்ற கூட்டம் வரும் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது. கூட்டம் முடிந்த மறுநாளே டீசல், சமையல் கியாஸ், மண்ணெண்ணெய் விலையை உயர்த்தப்படலாம் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று அதிகரித்துவிட்டது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.2.35-ம் ஒரு லிட்டர் டீசலுக்கு 50 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏழை, நடுத்தர உள்பட அனைத்து தர மக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ரயில்,லாரி, கட்டணமும் உயர்ந்து விலைவாசிகளும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.   சமையல் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.50-ம் உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்